"அப்பார்ட்மென்ட்கள்".. பெங்களூருவில் என்ன நடக்கிறது.. திகிலை கிளப்பும் கொரோனா.. குழம்பும் அதிகாரிகள்
பெங்களூரு அப்பார்ட்மென்ட்களில் தொற்று அதிகமாக பரவி வருகிறதாம்
பெங்களூரு: சில அப்பார்ட்மென்ட்களில் மட்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவுகிறதாம்.. இதனால் மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' மண்டலமாக அடையாளம் காண, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தென்மாநிலங்களில் கர்நாடகாவில்தான் தொற்று அதிகமானது.. தங்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்று அம்மாநில முதல்வரே ஓபனாக புலம்பும் அளவுக்கு தொற்று அதிகமாகிவிட்டது.
இதற்கு பிறகு நிறைய லாக்டவுன்களை போட்டு, ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர பெரும் முயற்சி அங்கு நடந்து வருகிறது...!

கட்டுப்பாடுகள்
இதனால், ஓரளவு தளர்வுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகிறது.. தளர்வுகள் போட்டதுமே, தொற்று மீண்டும் தென்பட துவங்கி உள்ளதாம். காரணம், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறதாம். இவர்கள் கொரோனா விதிமுறைகளை மீறுகின்றனர்.. இதனாலேயே தொற்று அதிகமாகி, மாநகராட்சிக்கு பெரும் சிரமத்தை தந்துள்ளது..

அப்பார்ட்மென்ட்
குறிப்பாக, சில அடுக்குமாடி குடியிருப்புகளில் திரும்பவும் கொரோனா பரவுவதால், தொற்று அதிகமானோர் வசிக்கும் பிளாட்டுகளை, "மைக்ரோ கன்டெய்ன்மென்ட்" மண்டலமாக அடையாளம் காண, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கொரோனா நோயாளிகளை டெஸ்ட் செய்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்... டெஸ்ட்களும் அதிகரிக்கப்படும்..

உத்தரவு
அதேபோல, வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்... அபார்ட்மென்ட்டில் மக்கள் அதிக அளவில் சேர்ந்துவிடாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அப்பார்ட்மென்ட்டுக்குள் இருக்கும் நீச்சல் குளம், ஜிம், மைதானம் போன்றவற்றை திறப்பதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

குற்றச்சாட்டுகள்
எனினும் பெங்களூருவில் தொற்று குறையாததற்கு காரணம், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவில்லை, அதனால்தான், அபார்ட்மென்ட்களில் தொற்று பரவுகிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.. ஆனால், மற்றொரு சாராரோ, பெங்களூருவில் மட்டும் 60 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்களை நீட்டுகிறார்கள்..!
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications