டேய் கையை எங்கே வைக்கிற! பெங்களூர் மெட்ரோவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அத்துமீறிய 55 வயது நபர்
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணித்த 25 வயது இளம்பெண்ணுக்கு 55 வயது நிரம்பிய நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மெட்ரோ ரயிலில் அந்த பெண்ணின் அருகே அமர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த பெண் அவரின் கண்ணத்தில் அறைந்து செக்யூரிட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் நகரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதும். இருக்கை கிடைக்காதவர்கள் மெட்ரோ ரயிலில் நின்றபடி பயணிப்பார்கள்.

இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயிலில் 55 வயது நபர் ஒருவர், தன் அருகே அமர்ந்திருந்த 25 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது 25 வயது நிரம்பிய பெண் பணியை முடித்து மெட்ரோ ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பெங்களூர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயிலில் ஏறி அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு ஆண், ஒரு பெண் இருந்தனர். ஒரு ஸ்டேஷனில் ஆண் இறங்கி சென்றார். இதனால் 55 வயது நிரம்பிய ஆண் ஒருவர் இளம்பெண் அருகே அமர்ந்தார்.
அந்த நபரின் பெயர் முத்தப்பா. இவர் மதுபோதையில் இருந்த நிலையில் தனது அருகே அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து தோளில் உரசியுள்ளார். அதோடு இளம்பெண் விலகி சென்றாலும் அவர் விடாமல் சீண்டி உள்ளார். இதனால் இளம்பெண் சிரமத்தை எதிர்கொண்டார்.
அதன்பிறகு இளம்பெண் தான் இறங்கும் ஸ்டேஷன் வந்தபோது அந்த நபரின் கன்னத்தில் அறை கொடுத்தார். அந்த நபரும் அதே ஸ்டேஷனில் தான் இறங்கினார். இதனால் பிளாட்பார்மில் வைத்தும் அவரது கன்னத்தில் அறைந்து தனது கோபத்தை இளம்பெண் காட்டினார்.
அப்போது அந்த நபர் அழுததோடு, தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனால் இளம்பெண் செக்யூரிட்டியிடம் ஒப்படைத்தார். உப்பார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் முத்தப்பாவை பிடித்து சென்று விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications