பெங்களூரில் மாடல் அழகியை பார்த்ததும்.. டெலிவரிபாய் செய்த செயல்.. அடச்சீ.. அதிரடி கைது
பெங்களூர்: பெங்களூரில் உள்ள அப்பார்ட்மென்ட்டுக்கு மளிகை பொருட்களை கொடுக்க போன டெலிவரி பாய் பிரேசில் மாடல் அழகி தனியாக இருப்பதை பார்த்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தார். உடனடியாக சுதாரித்த மாடல் அழகி அவரை வெளியே தள்ளி கதவை பூட்டிய நிலையில் தற்போது டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் வசித்து வருபவர் குமார் ராவ் பவார். இவருக்கு வயது 22. தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி படிப்புக்கு நடுவே அவர்‛பார்ட் டைம்' முறையில்‛பிளிங்கிட்' நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் சார்ந்த விளம்பரத்துக்காக அவர் வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக பிரேசில் மாடல் அழகி பெங்களூரில் தங்கி உள்ளார். தனியார் நிறுவனம் சார்பில் அவருக்கு சுல்தான்பாளையாவில் வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேசில் மாடல் அழகியுடன் மேலும் 2 மாடல் அழகிகள் தங்கி உள்ளனர். கடந்த 17 ம்தேதி பிரேசில் மாடல் அழகி ‛பிளிங்கிட்' ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு மளிகை பொருட்களை எடுத்து கொண்டு குமார் ராவ் பவார் முதல் தளத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
வீட்டின் முன்பு உள்ள ‛காலிங்பெல்லை' அடித்தார். பிரேசில் மாடல் அழகி கதவை திறந்தார். அப்போது மாடல் அழகியிடம் அவர் தவறாக நடந்து கொண்டார். பொருட்களை அவரிடம் கொடுப்பது போல் தொடக்கூடாத இடங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேசில் மாடல் அழகி அவரை அங்கிருந்து வெளியே தள்ளி உடனடியாக கதவை பூட்டினார்.
இருப்பினும் பாதுகாப்பு கருதி பிரேசில் மாடல் அழகி போலீசில் புகார் கொடுக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற அச்சத்தில் அவர் யோசித்து கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் சம்பவம் குறித்து தன்னுடன் தங்கியுள்ள மாடல் அழகிகளிடம் கூறினார். இதுதொடர்பக ஆர்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ‛டெலிவரி பாயின்' உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் டெலிவரி பாய் குமார் ராவ் பவானை அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications