மேரேஜூக்கு "நோ" சொன்ன காதலி.. நடுரோட்டில்.. பட்ட பகலில் காதலன் செய்த சம்பவம்.. கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காத காதலியை நடுரோட்டில் வைத்து பட்டப்பகலில் படுகொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து காதலன் தற்கொலைக்கு முயன்றதால் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கர்நாடகாவின் தாவாங்கரேவை சேர்ந்தவர் சந்த் பீர். இவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான சந்த் சுல்தானா எனும் இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் நீண்ட நாட்கள் ஒன்றாக பழகி ஒருவரையொருவர் புரிந்துகொண்டுள்ளனர். அப்போதுதான் சந்த் பீர், சுல்தானாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.

காதல்
இதற்கு சுல்தானாவும் சம்மதித்துள்ளார். இருவரும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு முதலில் விஷயத்தை சந்த் பீர் வீட்டில் கூறியுள்ளனர். இவர்களது வீட்டில் பெரிய அளவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் சுல்தானா வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால் இங்குதான் பிரச்னை வெடித்திருக்கிறது. இவர்களின் திருமணத்திற்கு சுல்தானா குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைதூக்கியுள்ளன. சந்த் பீர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் கிடையாது.

பொருளாதாரம்
ஆனால் சுல்தானா குடும்பத்தினர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவராவார்கள். எனவேதான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் காதலை முறித்துக்கொள்வோம் என்று சுல்தானா, சந்த்திடம் கூறியுள்ளார். இதற்கு சந்த் பீர் ஒப்புக்கெளாள்வில்லை. இது குறித்து பேசும்போதெல்லாம் சண்டைதான் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சண்டை போடுவதும் பின்னர் சமாதானம் ஆவதும் என இருந்து வந்துள்ளனர். ஆனால் எப்படி இருந்தாலும் கடைசி வரை சுல்தானா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவேயில்லை.

நிச்சயம்
இதற்கிடையில் சுல்தானாவுக்கு அயூப் எனும் நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்ட சந்த் பீர், சுல்லாதானவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதுதான் தனது கடைசி சண்டை என சுல்தானாவுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த சண்டை நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சந்த் பீர் பலமுறை சுல்தானாவை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் சுல்தானா இதனை கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் நேற்று வேறு வழியின்றி எடுத்து பேசி இருக்கிறார். அப்போது உருக்கமாக பேசிய சந்த் பீர் "நீ சொன்னது சரிதான். நாம் பிரிந்துவிடலாம். ஆனால் கடைசியாக ஒருமுறை உன்னை வந்து பார்த்துவிட்டு போகிறேன். இனி உன்னை பார்க்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

கடைசி சந்திப்பு
இதனை நம்பி தாவாங்கரேவில் தான் பணி செய்யும் விடுத்திக்கு சுல்தானா அழைத்துள்ளார். அங்கு வந்த சந்த் பீர் கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருக்கையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக அவரை தாக்கியுள்ளார். இதில் சுல்தானா சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட சந்த் பீர் உடனே அங்கிருந்து சென்றுவிட்டார். சுல்தானாவின் நிலையை கண்டு அம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் போன் செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் வந்து பார்ப்பதற்குள் சுல்தானா இறந்துவிட்டார்.

கைது
சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்த் பீரை அடையாளம் கண்டனர். எனவே உடனடியாக அவரை தேடி புறப்பட்டனர். ஆனால் சந்த் பீர் அவரது வீட்டில் இல்லை. எனவே அவரின் நண்பர்களிடத்தில் விசாரித்து தேடி பிடித்து சந்த் பீரை கைது செய்தனர். ஆனால் அங்குதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது சந்த் பீர் இந்த சோகம் தாங்காமல் விஷம் குடித்துள்ளார். எனவே அவரை காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலியை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications