குடிகார டிரைவர்.. தறி கெட்டு ஓடிய கார்.. விரட்டிச் சென்ற தம்பதி.. பெங்களூரில் பரபரப்பு!
சாலையில் முன்சக்கரம் இல்லாமல் சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

பெங்களூரு: பெங்கரூரு ரோட்டில் தீப்பொறிகளை தெறிக்க விட்டவாறே தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருந்த அந்த காரினால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.
பெங்களூரு லக்கரேவில் இருந்து சும்மனஹள்ளி செல்லும் ரோட்டில் ஒரு வெள்ளை நிற கார் வேகமாக வந்தது.
இவ்வளவு வேகமாக கார் வருகிறதே என்று பொதுமக்கள் கவனித்தால், அது வேகம் இல்லை.. கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது தெரிந்தது.
[கார் ஓட்டியபோது ஹெல்மெட் அணியவில்லை.. ரூ. 500 அபராதம் விதித்த சின்சியர் போலீஸ்..!]

டிரைவர் நிறுத்தவில்லை
இதனால் ரோட்டில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என எல்லோரும் அச்சமடைந்தார்கள். கடந்து செல்லும் காரை பார்த்து எல்லோரும் கத்தி கூச்சல் போட்டார்கள். கார் டிரைவர் நிறுத்தவே இல்லை. அதனால் அந்த காருக்கு பின்னால் மற்றொரு காரில் ஒரு தம்பதி அதை கவனித்து காரை நிறுத்த பார்த்தனர்.

இடித்து தள்ளிய கார்
அவர்களாலும் முடியவில்லை. காரணம் அந்த காரில் முன் டயர் வெடித்து சிதறியிருந்தது. வெறும் ரிம் மட்டும்தான் ரோடில் ஓடிகொண்டிருந்தது. அதனால்தான் சாலையில் உரசி தீப்பொறிகள் கிளம்பியுள்ளன. கட்டுப்பாட்டையும் இழந்ததால் ரோட்டில் நின்றிருந்த, போய்க் கொண்டிருந்த பைக், கார்களை இடித்து தள்ளி சென்றது.

ஃபுல் போதை
ஆனாலும் அந்த தம்பதி காரை விடவே இல்லை. எப்படியாவது விரட்டி பிடித்து நிறுத்தி ஆபத்து வராமல் தடுக்க முயன்று கொண்டே இருந்தார்கள். இப்படியே 4 கி.மீ. தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தார்கள். கடைசியில் அந்த கார் டிரைவரை என்ன ஏதென்று விசாரித்தால், அவர் ஃபுல் போதையில் நிற்கிறார். வாயை திறந்து எதுவுமே அவரால் பேசக்கூட முடியவில்லை.

டிரைவர் கைது
பிறகு அவரையும் மீட்ட அந்த தம்பதி, காமாட்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் விரைந்து வந்து டிரைவரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். இப்படி தறிகெட் ஓடிய காரில் தெறித்து விழுந்த தீப்பொறிகளால் பெங்களூர் ரோடில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications