சாம்பாரில் பாட்டிக்கு மயக்கமருந்து.. மைனர் பெண் பலாத்காரம்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஆசை வார்த்தைகள் கூறியும், பாட்டிக்கு சாம்பாரில் மயக்க மாத்திரை கலந்து கொடுக்க கூறியும் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த முஸ்லிம் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நிலையில் மதம்மாற கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவை அதிர வைத்துள்ளது.

மண்டியா மாவட்டம் நாகமங்களா டவுனை சேர்ந்தவர் யூனுஸ் பாஷா (வயது 25). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு ஆண் குழந்தை உள்ளது.

இதேபோல் நாகமங்களா டவுனை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. மாற்றுத்திறனாளியான இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

 ஆசை வார்த்தைகள்

ஆசை வார்த்தைகள்

இந்த சிறுமியின் வீடும், யூனுஸ் பாஷாவின் வீடும் அருகருகே உள்ளது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். பக்கத்து வீடு என்பதால் யூனுஸ் பாஷா சிறுமியுடன் பழகினார். வயதில் மூத்தவர் என்பதால் அண்ணன் என்ற முறையில் சிறுமியும் பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் மாறியுள்ளது. யூனுஸ் பாஷா சிறுமியிடம் பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார்.

திருமணம் செய்வதாக...

திருமணம் செய்வதாக...

இந்நிலையில் தான் யூனுஸ் பாஷா, சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதனை வீட்டுக்கு தெரியாமல் வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இந்த வேளையில் சிறுமியிடம் யூனுஸ் பாஷா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளும் கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 8 ம் தேதி சிறுமியின் தந்தை வெளியூர் சென்றார். இதனால் சிறுமி பாட்டியின் வீட்டுக்கு சென்றார்.

செல்போனில் பேச்சு

செல்போனில் பேச்சு

இந்தவேளையில் சிறுமியை தொடர்பு கொண்டு யூனுஸ் பாஷா பேசினார். அப்போது உன்னை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு நவம்பர் 11ம் தேதி வீட்டுக்கு வருகிறேன் என கூறியுள்ளார். இதை கேட்ட சிறுமி வேண்டாம் எனக்கூறிய நிலையில் யூனுஸ் பாஷா விடவில்லை. இதனால் சிறுமி அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 சாம்பாரில் பாட்டிக்கு மயக்க மாத்திரை

சாம்பாரில் பாட்டிக்கு மயக்க மாத்திரை

இதையடுத்து பாட்டிக்கு சாம்பாரில் மயக்கமாத்திரையை கலந்து கொடுக்க வேண்டும் என யூனுஸ் பாஷா கூறியுள்ளார். சிறுமியும் பாட்டிக்கு சாம்பாரில் மயக்க மாத்திரையை பொடியாக்கி மிக்சிங் செய்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட அவர் மயங்கினார். இதையடுத்து நள்ளிரவில் யூனுஸ் பாஷா யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

ஆபாச வீடியோ காட்டி மிரட்டல்

ஆபாச வீடியோ காட்டி மிரட்டல்

இதையடுத்து யூனுஸ் பாஷா, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதை வைத்து மிரட்டவும் தொடங்கி உள்ளார். அதாவது தனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் போட்டோ, வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என அவர் மிரட்டினார். இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

பெற்றோருக்கு சந்தேகம் - கைது

பெற்றோருக்கு சந்தேகம் - கைது

இதற்கிடையே தான் சிறுமியின் நடத்தையில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி சிறுமியிடம் அவர்கள் விசாரித்தனர். விசாரைணையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி அழுதபடி கூறினார். மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறியவர் முஸ்லிம் மதத்துக்கு மாறினால் தான் திருமணம் செய்வதாக கூறியதாகவும், மிரட்டி ஏமாற்றியதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாகமங்களா டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து யூனுஸ் பாஷாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தான் இந்த விவகாரம் லவ் ஜிகாத் என புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+