ஓட்டு போட்டதுமே பிரசவ வலி.. வாக்குச்சாவடியிலேயே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்.. அடடே!
பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், பெல்லாரி தொகுதியில் கோர்லகண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த கர்ப்பிணிப் பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்பெண் வாக்களித்ததும் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்டு உடனே தனி அறைக்கு கொண்டு சென்று அங்குள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கர்நாடகாவில் 72.67% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக - காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது என்பது வரும் 13-ஆம் தேதி தெரிந்துவிடும்.
இந்த நிலையில், இன்று கர்நாடகாவில் வாக்குப்பதிவின்போது பெல்லாரி மாவட்டத்தில் கோர்லகண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். வாக்குச் சாவடி எண் 228ல் மணிலா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது வாக்கை செலுத்துவதற்காக வந்திருந்தார்.
அவர் வாக்களித்த பின்னர், வாக்குச் சாவடியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். அங்கு அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். பின்னர் அந்தப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications