கர்நாடகாவில் அடிக்கும் "மோடி" அலை.. காங்கிரசுக்கு அதிர்ச்சி.. "இமாலய" வெற்றியாம்! புதிய சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ABP C Voter predicts Huge win for BJP in karnataka lok Sabha election

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

கர்நாடகா: இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஏபிபி மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது

யாருக்கு எத்தனை இடம்: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே 23 இடங்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது பாஜக மட்டும் அங்கு 21 இடங்களிலும் ஜேடிஎஸ் அங்கு 2 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அங்கு வெறும் 5 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

பாஜக பிளான்: கர்நாடகாவுக்கு பாஜக ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறது. முன்னாள் முதல்வர்கள் 3 பேரை அங்கு பாஜக களமிறக்கி இருக்கிறது. பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் போட்டியிடும் நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் பெல்காம் தொகுதியில் களமிறங்குகிறார். அதேபோல பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சி சார்பில் குமாரசாமி மாண்டியா தொகுதியில் களமிறங்கி இருக்கிறார்.

பசவராஜ் பொம்மை மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.. குமாரசாமி வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். இதன் மூலம் இந்த சமூகத்தினரைக் கவர முடியும் என்று பாஜக நம்புகிறது. அதற்குப் பலனும் கிடைப்பதாகவே இந்த ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மேலும், லோக்சபா தேர்தலில் மோடி பேக்டர் உள்ளே வருவதும் பாஜக வெற்றிக்கு உதவுகிறது.

காங்கிரஸ்: கர்நாடகாவில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று அக்கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கிறார். இருப்பினும், இந்தத் தேர்தல் லோக்சபா தேர்தல் என்பதால் அங்குப் பலரும் மோடிக்காக பாஜகவுக்கு வாக்களிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுவே பாஜகவின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. இதுவரை வந்த பல்வேறு கருத்துக்கணிப்புகளும் இதையே தான் காட்டுகிறது.

இருப்பினும் இதைக் காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது. இந்த முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் மக்களின் மனதைத் திசைதிருப்புகிறார்கள்..

பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே அரசியல் சட்டத்தையே மாற்றுவேன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அரசியல் சட்டத்தை அம்பேத்கர் நமக்குக் கொடுத்தார். ஆனால், ஏதோ அரசியல் சட்டத்தை சர்வார்க்கர் கொடுத்தார் என்றெல்லாம் பேசுகிறார் ஆனால், அவர் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை" என்று விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+