சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட 'ஜெயிலர்' சிவராஜ் குமார்! என்ன பேசினார்
பெங்களூர்: நடிகர் சித்தார்த்தைப் பெங்களூரில் கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டியது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
காவிரி விவகாரம் தமிழ்நாடு- கர்நாடகா இடையே தொடர்ந்தே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதே பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது.

இந்தாண்டும் அதே கதைதான். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை கர்நாடகா சென்று பார்த்தது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையம் பரிந்துரைப்படி நீரைத் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
பந்த்: அதன்படி இப்போது 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இதற்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்த் நடந்து வருகிறது.
நடிகர் சித்தார்த்: இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய தினம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. அதாவது நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'சித்தா'.. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அதன்படி 'சித்தா' படத்தின் கன்னட ரிலீசுக்காக சித்தார்த் பெங்களூர் சென்றிருந்தார்.
பட புரோமேஷன் நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில், தனது "சித்தா" திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கே வந்த கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவப்பு - மஞ்சள் துண்டு அணிந்து வந்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் இதைப் பார்த்து சித்தார்த் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
மன்னிப்பு: சில நிமிடங்கள் சித்தார்த் காத்திருந்த நிலையில், கன்னட அமைப்பினர் அங்கிருந்து நகர்வதாக இல்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை இழுப்பனர். இதையடுத்து நடிகர் சித்தார்த் பாதியிலேயே மேடையில் இருந்து கிளம்பினார். இதனால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர்களை ஏன் இழுக்கிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதற்கிடையே இப்போது நடிகர் சிவராஜ் குமாரும் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இது குறித்துப் பேசுகையில், "இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. கன்னட மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள். அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்ப்பவர்கள்" என்று கூறியுள்ளார். சிவராஜ் குமாரின் இந்த வீடியோவையும் இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அமைச்சர் துரைமுருகன்: முன்னதாக இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத ஒன்று என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், இப்போது கர்நாடகா அளிக்கும் நீர் போதாது என்றும் 12500 அடி நீரைக் கர்நாடகாவிடம் வலியுறுத்திப் பெறுவோம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications