நடிகைகள் ராஷ்மிகா - ரம்யா எங்கே? லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்காமல் ‛எஸ்கேப்’.. விளாசும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா ஆகியோர் ஓட்டுப்போடவில்லை. இந்நிலையில் தான் இருவரையும் நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.

கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு தலா 14 தொகுதிகள் என பிரித்து 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதியும், 2வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 ம் தேதியும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Actress Rashmika Mandana and Ramya did not cast their votes in Karnataka Lok Sabha Election 2024

அதன்படி நேற்று முதற்கட்டமாக பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் புறநகர், மைசூர் - குடகு, மைசூர் உள்பட 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடந்தது.

இதில் மொத்தம் 69.23 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. அதிகபட்சமாக மண்டியா தொகுதியில் 81.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. குறைந்தபட்சம் என்றால் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் 52.81 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் நேற்று நடந்த தேர்தலில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான நடிகை ரம்யா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தேர்தலில் ஓட்டளிக்கவில்லை.

தமிழ் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2013 மண்டியா லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங்க் தலைவராக செயல்பட்டார்.

20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?


இந்நிலையில் தான் நடிகை ரம்யா நேற்றைய தேர்தலில் ஓட்டளிக்கவில்லை. அவரது பெயர் மண்டியா மாவட்டம் கேஆர் ரோட்டில் பிஎல்டி பேங்க் பூத்தில் உள்ளது. இந்த பூத் மண்டியா லோக்சபா தொகுதிக்குள் இருக்கிறது. ஆனால் நேற்று ரம்யா ஓட்டுப்போடவில்லை. இவர் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலிலும் ஓட்டுப்போடவில்லை.

‛சென்னையை விட மோசம்’.. லோக்சபா தேர்தலில் பெங்களூரில் ஓட்டுப்போடாத 50% பேர்! ஏன் இப்படி இருக்காங்க


அதேபோல் பிரபலமாக உள்ள இன்னொரு நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் நேற்று ஓட்டுப்போடவில்லை. இவர் தமிழில் சுல்தான் மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தான் சொந்த ஊர். மைசூர் -குடகு லோக்சபா தொகுதிக்குள் வரும் விராஜ்பேட்டையில் உள்ள பூத்தில் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் இருந்தாலும் கூட நேற்று அவர் ஓட்டளிக்கவில்லை.


இதனால் நடிகை ரம்யா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மீது நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். தேர்தலில் ஓட்டளிக்காமல் எங்கே போனீர்கள்?. தேர்தலில் ஓட்டளிப்பதை விட வேறு என்ன வேலை இருக்கப்போகிறது? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகை ரம்யா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து தான் அவர்களின் பெயர்களை ‛டேக்’ செய்து ஓட்டுப்போடாமல் போனதற்கான காரணத்தை பலரும் கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+