Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னட நடிகர் எனது கணவரா? இத வந்து கர்நாடகாவுல சொல்லி பாருங்க.. சீமானுக்கு விஜயலட்சுமி பதிலடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சீமான் ரூ 1 கோடி கேட்டால் நான் 20 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என நடிகை விஜயலட்சுமி ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி தன்னை சீமான் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தன்னால் சீமானை எதிர்க்க முடியவில்லை என கூறி கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டு அவர் பெங்களூருக்கே சென்றுவிட்டார். ஆனாலும் செய்தியாளர்கள் சந்திப்புகளின் போது சீமான் விஜயலட்சுமி குறித்து பேசும் சில பேச்சுகள் நடிகையை கோபத்துக்குள்ளாக்குவதால் அவரும் வீடியோ மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

Actress Vijayalakshmi says she will file defamation case against Seeman

அந்த வகையில் விஜயலட்சுமி வெளியிட்டிருந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: சீமான் ஒரு கோடி நஷ்ட ஈடு வழக்கை போட்டதால் விஜயலட்சுமி அப்படியே கதறிகிட்டு இருக்காங்க என நாம் தமிழர் கட்சியின் யூடியூப் சேனல்களில் தெரிவித்து வருகிறார்கள். சீமானுக்கு நன்றி கிடையாது. அவர் சார்ந்த யூடியூப் சேனல்களுக்கும் நன்றி கிடையாது.

என் அக்கா நடிகை ஜெயப்பிரதாவின் தம்பியை திருமணம் செய்திருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2008ஆம் ஆண்டு என் அக்காவின் குழந்தையை அவருடைய கணவர் தூக்கிச் சென்றுவிட்டார். அப்போதுதான் அந்த பிரச்சினையை சரி செய்து கொடுக்குமாறு கேட்பதற்காகவே சீமானை சந்தித்தேன். அப்போதுதான் ஆரம்பித்தது பிரச்சினை.

அவரால் என் அக்காவுக்கும் எந்த நன்மையும் கிடையாது. என் அக்கா பக்கவாதத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் கூட அவர் மீது சீமானுக்கு எந்த கருணையும் கிடையாது. எனக்கும் அவரால் எந்த பயனும் இல்லை. அவரால் நான் பட்ட கஷ்டத்திற்காக என் மீதும் அவருக்கு கருணையே கிடையாது. எல்லாத்தையும் அவருக்கு சாதகமாகவே செய்துவிட்டு என்னை இரவோடு இரவாக பெங்களூருக்கு அனுப்பிவிட்டார்கள்.

என் அக்காவை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் வாழ்க்கையையும் நான்தான் பார்க்கணும், சீமானும் வரமாட்டார், நாம் தமிழர் கட்சியும் வரமாட்டார்கள். இதனால் நான் போட்ட கேஸை பெருந்தன்மையாக வாபஸ் பெற்றுவிட்டு நீங்கள் நாசமா போங்க என கூறிக் கொண்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன். நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதோடு என்னை விட்டால் ஓகே. ஆனால் என்னை பற்றி ஏதாவது அவதூறு பேசிக் கொண்டு, மான நஷ்ட வழக்கு போட்டிருக்கிறோம் சென்னை வாங்க என அழைத்து அவமானப்படுத்தினால் விட மாட்டேன். சீமான் என்னை ஒரு கன்னட நடிகருடன் சம்பந்தப்படுத்தி பேசி வருகிறார். அவருடன் எனக்கு திருமணமாகிவிட்டதாக அவதூறு பரப்புகிறார். நான் கணவரா அந்த கன்னட நடிகர் கணவரானு சீமான் கேட்டுள்ளார்.

எனவே சீமான் ஒரு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தால் நான் 10 கோடி இல்ல 20 கோடி கேட்டு பெங்களூர் கோர்ட்டுக்கு இழுப்பேன். ஏனென்றால் சீமான் எனது கணவர் என பொய் சொல்லும் அந்த கன்னட நடிகர் மிகவும் பிரபலம், அவரது மனைவி விஜயலட்சுமி என கூறினால் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள்.

கேஸை வாபஸ் வாங்கியதுடன் முடித்துக் கொண்டால் ஓகே. ஆனால் விடாமல் என்னை ஏதாவது வம்புழுக்கு இழுத்து கொண்டே இருந்தால் நான் விட மாட்டேன். நானும் 20 கோடி கேட்டு, அந்த நடிகரையும் 20 கோடி கேட்க வைத்து சீமானை கர்நாடகா கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன். இதனால் அவருக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுவேன். எல்லாருடைய ஆட்டத்தையும் இத்துடன் நிறுத்திக் கோங்க. இவ்வாறு விஜயலட்சுமி பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+