சூரிய கதிர்களை "கிளிக்" செய்த ஆதித்யா எல் 1.. இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம் சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டர் கருவி படமெடுத்து அனுப்பியுள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன்பிறகு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
அதன்படி மொத்தம் 5 படிநிலைகளில் விண்கலத்தின் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். பின்னர் விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சூரியனின் மேற்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல் -1 விண்கலம் மேற்கொள்ள உள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த விண்கலம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்று ஆய்வினை தொடரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ முக்கிய அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது.

அதாவது, ஆதித்யா எல்.1 விண்கலம் சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை அக்.29 ஆம் தேதி ஆதித்யா எல்1 படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலம் அனுப்பிய இந்த டேட்டாக்கள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வினை செய்ய உதவும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications