பெங்களூரில் அரசு நிர்வாகம் தடுமாற்றம்.. வெள்ளம் வடிந்தாலும் குடிநீர் வினியோகம் இல்லை! மக்கள் தவிப்பு
பெங்களூர்: பெங்களூரில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு இருந்தாலும் கூட தற்போது சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரூ.600 கொடுத்து டிராக்டர் டேங்கரில் குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. தென்கர்நாடகாவில் உள்ள பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்தது. இதனால் பெங்களூர் நகரின் சில இடங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை
ஆகஸ்ட் 30ம் தேதி மற்றும் கடந்த 4ம் தேதி பெங்களூரின் பல இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 4ம் தேதி மட்டும் 130 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. இதனால் பெங்களூரில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் பல வீடுகளையும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பாமரர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

மழை வெள்ளம்
குறிப்பாக பெங்களூர் பெல்லந்தூர், அவுட்டர் ரிங்க் ரோடு, சர்ஜாபுரா, மகாதேவபுரா, சந்தாபுரா, பொம்மனஹள்ளி, இந்திரா நகர், மாரத்தஹள்ளி, வர்த்தூர், ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள இடங்களில் மழை நீர் புகுந்து கொண்டது. ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐடி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் தொடர்ந்து மழைநீர் வடியாததால் மக்கள் சிரமததை சந்தித்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மழை வெள்ளம் முழுவதுமாக வடிந்தது. தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

குடிநீர் வினியோகம் இல்லை
இருப்பினும் பெங்களூர் நகரில் சில இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது மழை வெள்ளத்தால் நீரேற்று நிலைகளங்களில் வெள்ளம் சூழ்ந்து மோட்டார் உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதாகின. இதனால் கோரமங்களா, மடிவாளா, சதாசிவநகர், இந்தியா நர், வசந்த் நகர், பிரேசர் டவுன், பேலஸ் குட்டதஹள்ளி, மத்திகொரே, மல்லேஸ்வரம் உள்பட பல இடங்களில் காவிரி குடிநீர் வினியோகம் தடைப்பட்டது இதையடுத்து மோட்டார் உள்பட இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டடு சில இடங்களுக்கு குடிநீர் வினியோகம் சரிசெய்யப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இன்னும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை
குறிப்பாக பெங்களூர் பெல்லந்தூர், அவுட்டர் ரிங்க் ரோடு, சர்ஜாபுரா, மகாதேவபுரா, சந்தாபுரா, பொம்மனஹள்ளி, இந்திரா நகர், மாரத்தஹள்ளி, வர்த்தூர், ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள இடங்களில் மழை நீர் புகுந்து கொண்டது. ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐடி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் தொடர்ந்து மழைநீர் வடியாததால் மக்கள் சிரமத்தை சந்தித்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மழை வெள்ளம் முழுவதுமாக வடிந்தது. தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

கோடையை விட மோசம்
பொதுவாக பெங்களூரில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு. ஆனால் தற்போது கனமழை பெய்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கூட பெங்களூரின் சில இடங்களில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோடைக்காலத்தை விட தற்போது சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications