காலையிலேயே டென்ஷன்.. முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை சூழ்ந்த போலீஸ்.. ஒரே பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலையிலேயே முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை போலீசார் சூழ்ந்ததால் டென்ஷனான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பான பரபரப்பு தகவல் வருமாறு:
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இநு்த ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. மொத்தம் 36 மையங்களில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருத்து கணிப்புகளின் படி இந்த தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். மாறாக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் எனவும், ஆட்சியை கூட இழக்கும் சூழல் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பாஜக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் கூட கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒருவேளை யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காவிட்டால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என எடியூரப்பாவுடன், பசவராஜ் பொம்மை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தான் இன்று காலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் அமைந்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை திடீரென போலீசார் சூழ்ந்தனர். இதனால் பரபரப்பான சூழல் உருவானது. அதாவது தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் மோப்பநாய் மோப்பம் பிடித்தது. தேர்தலில் ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தாலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications