விரைவில் தேர்தல்.. இடஒதுக்கீட்டால் கொதிக்கும் கர்நாடகா! எடியூரப்பா வீட்டில் கல்வீச்சு-தடியடி.. ஷாக்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் வகையில் பாஜக இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீடு மீது கற்கள் வீசப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் போலீசார் மீதும் கற்கள், செருப்பு வீசப்பட்ட நிலையில் தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கிறார். முன்னதாக கர்நாடகாவில் பாஜகவின் முகமாக உள்ள எடியூரப்பா 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து தான் பசவராஜ் பொம்மை முதல்வராக தொடர்ந்து வருகிறார்.

பாஜகவின் முகமாக எடியூரப்பா
இந்நிலையில் தான் வயது முதிர்வால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் அவர் போட்டியிட்ட சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார். தேர்தலில் இருந்து எடியூரப்பா ஒதுங்கி உள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக எடியூரப்பா தான் உள்ளார்.

இடஒதுக்கீட்டில் மாற்றம்
எடியூரப்பாவின் இந்த விலகல் மட்டுமின்றி, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மீதான ஊழல், முறைகேடு புகார்கள் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும், கட்சியில் அங்கம் வகிக்கும் சிடி ரவி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் உள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு மைனஸாக வாய்ப்புள்ளது. இருப்பினும் பிரச்சனைகளை சமாளித்து எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. இதனால் தான் அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டு வர அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டில் என்ன மாற்றம்?
அதன்படி இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டின் 4 சதவீதத்தை லிங்காயத், ஒக்கலிகருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான உள்இடஒதுக்கீட்டையும் உயர்த்த மாநில அரசு முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு
இந்நிலையில் தான் சிகாரிப்புராவில் உள்ள எடியூரப்பாவின் வீட்டின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான உள்இடஒதுக்கீட்டை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா மற்றும் போவி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இன்று எடியூரப்பாவின் வீட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு அவர்கள் எடியூரப்பாவின் வீடு முன்பு திரண்டனர்.

கல்வீச்சு-தடியடி-பரபரப்பு
மேலும் டயர்களுக்கு தீயிட்டு கொளுத்தினர். மேலும் எடியூரப்பாவின் வீட்டு அருகே உள்ள ஆலோசனை கூட்டம் நடக்கும் கட்டடத்தின் மீது ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிலர் எடியூரப்பாவின் வீட்டு மீது கற்களை வீசினர். இதில் வீட்டில் இருந்த கண்ணாடிகள் சல்லிசல்லியாக உடைந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் சிகாரிப்புராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications