பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு… டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
Recommended Video

பெங்களூர் : பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன என அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும்; அப்போது பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும் டிடிவி தினகரன் கூறினார்..
மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பொள்ளாச்சியில் மாணவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை கண்டனத்துக்குரியது என்றார்.
அமமுக சார்பில் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications