தினமும் 9 மணிநேரம் தூங்கியே.. ரூ.9.1 லட்சம் வென்ற புனே பெண்! நீங்களும் கலந்துக்கலாம்! ரூல்ஸ் இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ‛ஸ்டார்ட்அப்' நிறுவனம் சார்பில் தூங்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 60 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்கிய புனேவை சேர்ந்த பெண் முதல் பரிசாக ரூ.9.1 லட்சத்தை வென்றார். இப்போது 5வது சீசனுக்கான அப்ளிகேஷன் ஓபனாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டி குறித்த சுவாரசிய தகவல் வருமாறு:

ஒவ்வொருவருக்கும் தூக்கம் முக்கியம். தினமும் குறைந்தபட்சம் 8 மணிநேரமாவது நன்றாக தூங்க வேண்டும். ஆனால் தற்போதைய வாழ்க்கையில் நம்மில் பலரும் சரியாக தூங்குவது இல்லை. வேலைப்பளு, செல்போனை அதிகம் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றால் பலரும் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

bangaluru sleep karnataka

இந்நிலையில் தான் தூக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தூங்கும் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த போட்டியின் பெயர் ‛ஸ்லீப் சாம்பியன் ஆப் தி இயர்'. இதனை Wakefit மெத்தை நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்த போட்டியை இன்டர்ன்ஷிப் போன்று நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு தூங்கும் சாம்பியன் போட்டி நடத்தப்பட்டது. 60 நாட்கள் தினமும் இரவில் 9 மணிநேரம் தொடர்ந்து தூங்கி புனேவை சேர்ந்த பூஜா மாதவ் வெற்றி பெற்றார். இவருக்கு முதல் பரிசாக ரூ.9.1 லட்சம் வழங்கப்பட்டது. பரிசு வென்ற பூஜா மாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஐபிஎஸ் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் தேர்வுகளை எழுதி வருகிறார்.

இந்த wakefit நிறுவனம் கடந்த 2019 ம் ஆண்டு முதல் 3 சீசன்களை நடத்தி இருந்தது. தற்போது 4 வது சீசனையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த 4வது சீசனில் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் வந்தன. அதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு தூங்கும் போட்டி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு நாள் இரவும் போட்டியாளர்கள் கண்விழிக்காமல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அவர்களின் தூக்கத்தின் தன்மையை கண்காணித்து மதிப்பெண் வழங்கப்பட்டது. அதில் பூஜா மாதவ் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பூஜா மாதவ் மொத்தம் 91.36 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசு வழங்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

தற்போது 5வது சீசனுக்கான அப்ளிகேஷன் ஓபன் செய்யப்பட்டுள்ளது.போட்டியின் ரூல்ஸ் என்னவென்றால் குறைந்தபட்சம் 22 வயது அல்லது அதைவிட கூடுதல் வயது இருக்க வேண்டும். ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே செய்ய முடியும். 2 அல்லது அதற்கு மேல் விண்ணப்பம் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சரியான தகவல்களை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அப்ளிகேஷனை முழுவதுமாக நிரப்பினால் மட்டுமே தேர்வுக்கு எடுத்து கொள்ளலாம்.

தாமதமாக வரும் அப்ளிகேஷன் ஏற்கப்படாது. சீசன் 1, 2, 3, 4 சீசனில் பங்கேற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் விதிமுறையில் உள்ள கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு போட்டிக்கு தேர்வு செய்யபப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+