புரட்டி போட்ட மோடி! பாஜகவிற்கு உயிர் தந்த அந்த விஷயம்! கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஷாக்! எக்சிட் போல்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பட்ட மெஜாரிட்டி பெறும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி இந்த முறை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தலில் 3 பெரிய கட்சிகளும் பல சிறிய சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பட்ட மெஜாரிட்டி பெரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
கணிப்புகள்:
உதாரணமாக,
இந்தியா டுடே எக்ஸிட் போல்: கடலோர கர்நாடகா மொத்தம் 19 தொகுதிகள்- பாஜக 16; காங்கிரஸ் 3 இடங்கள் வெல்லும் வாய்ப்பு என்று கூறப்பட்டு உள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ்:
காங்கிரஸ் 107-119,
பாஜக 78-90,
ஜேடிஎஸ் 23-29
ஜி நியூஸ் கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 103-118
பாஜக 79-94
ஜேடிஎஸ் 25-33
ரிபப்ளிக் டிவி பி மார்க்
காங்கிரஸ் 94-108
பாஜக 85-100
ஜேடிஎஸ் 24-38
டிவி9 - சிவோட்டர்
காங்கிரஸ் 100-112
பாஜக 83-95
ஜேடிஎஸ் 21-29
ஜன்கி பாத்-ஏசியாநெட் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெல்லும்
பாஜக 94-117
காங்கிரஸ் 91-106
ஜேடிஎஸ் 14-24
டிவி9 கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 99-109
பாஜக 88-98
ஜேடிஎஸ் 21-26
நியூஸ் நேஷன்: பாஜக வெல்லும் என்று கணிப்பு
காங்கிரஸ் 86
பாஜக 114
ஜேடிஎஸ் 21
கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பெறும் என 3 நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்கள் பெறும் என 4 நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆனால் பெரிதாக யாரும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெறும் என்று கூறவில்லை. மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
113க்கு கீழ்தான் காங்கிரஸ் வெல்லும். அங்கே ஜேடிஎஸ் ஆதரவோடு யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மோடி காரணமா?
கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பட்ட மெஜாரிட்டி பெரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்து கணிப்பில் இந்த பின்னடைவு ஏற்பட காங்கிரஸ் கட்சியின் கடைசி கட்ட சொதப்பல்கள் காரணமாக இருக்கலாம். தேவையின்றி பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கூறியது கடலோர மாவட்டங்களில் பாஜகவிற்கு ஆதரவாக மாறி உள்ளது.
அதேபோல் பெங்களூர் மற்றும் சில மாவட்டங்களில் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரச்சாரம் கடைசி நேரத்தில் பாஜகவிற்கு உயிர் கொடுத்தது. முக்கியமாக மோடி செய்த ரோட் ஷோ பாஜகவிற்கு பெரிய அளவிலான உத்வேகத்தை கொடுத்து உள்ளது.
அங்கே ஊழல் குற்றச்சாட்டுகளாலும், விலைவாசி உயர்வாலும், பின்னடைவை சந்தித்திருந்தது பொம்மை அரசு. அதோடு ஜாதி ரீதியாகவும் பாஜகவிற்கு பின்னடைவு இருந்தது. மேலும் சீனியர்கள் ஒதுக்கப்பட்டு பாஜக சார்பாக பலர் புது முகங்களாக களமிறக்கப்பட்டனர்.
ஆனால் பஜ்ரங்தளை தடை செய்வோம் என காங்கிரஸ் கூறியதும், மோடி பிரச்சாரமும் பாஜகவிற்கு உயிரை கொடுத்தது. அனுமார் கோவில்களை கட்டுவோம் என டிகே சிவகுமாரே சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஜெய் பஜ்ரங்தள் என காங்கிரஸ் தலைவர்களே கோஷம் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது போக மோடி அங்கே அங்கே எமோஷனலாக பேசியதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்புகிறது என்று கருத்து கணிப்பை பார்க்கும் போது எண்ண தோன்றுகிறது.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications