Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூருக்கு விரைந்த ஸ்டாலின்.. அந்த 7 மாஸ்டர் பிளான்.. தேசிய அரசியலையே மாற்ற போகுது.. பாஜக பகீர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் மேற்கொள்கிறார். காலை பெங்களூர் செல்லும் அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார்.

24 எதிர்க்கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

Are these 7 master plans from CM Stalin ahead of Mega Opposition party meeting in Bangalore?

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.

ஸ்டாலின் பிளான்: முதல்வர் ஸ்டாலின் கடந்த முறை இந்த கூட்டத்தில் தெரிவித்த 7 திட்டங்களை இந்த முறை கூட்டத்தில் அழுத்தி சொல்வார், அது தொடர்பான விரிவான திட்ட விளக்கங்களை அளிப்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். அதாவது எந்த மாநிலத்தில் எந்த கட்சி பெரிய கட்சியோ அவர்கள்தான் கூட்டணிக்கு தலைவர்கள். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம். உதாரணமாக கூட்டணி இல்லை அதே சமயம் ஒரே இடத்தில் இரண்டு கட்சிகளும் எதிர்த்து போட்டியிட கூடாது. கேரளா போன்ற மாநிலங்களில் இது சாத்தியம்.

3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இது சாத்தியம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. தேர்தலுக்கு முன்பே நட்பை உறுதிசெய்ய வேண்டும். 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும்.

6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும். இந்த குழு மட்டுமே கூட்டணி மோதல் பற்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். 7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நடக்கும் கூட்டத்திலும் பெங்களூரில் பேசுவார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+