"பிரதமர் பதவி எங்களுக்கு வேண்டாம்.." வெளிப்படையாக பேசிய கார்கே.. பெங்களூர் மீட்டிங்கில் பரபர
பெங்களூர்: இன்று பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில், பிரதமர் பதவி குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதையே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முன்னெடுப்பை நிதிஷ்குமார் செய்திருந்தார்.
பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. இதற்கிடையே இரண்டாவது கூட்டம் பெங்களூரில் இப்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவி: காங்கிரஸ் தலைவர் கார்கே, "இங்தே நாங்கள் 26 கட்சிகள் இருக்கிறோம். மொத்தம் 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். வரும் தேர்தலில் நிச்சயம் பாஜகவால் வெல்ல முடியாது.. கடந்த தேர்தலில் பாஜக மட்டும் தனித்து ஒன்றும் 303 இடங்களைப் பெறவில்லை.. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தித் தான் வென்றது. இருப்பினும், வெற்றி பெற்ற பிறகு கூட்டணிக் கட்சிகளை பாஜக முற்றிலுமாக நிராகரித்துவிட்டது" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
மேலும் கார்கே, தனது கட்சிக்குப் பிரதமர் பதவி மீது ஆர்வம் இல்லை என்று கூறினார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியை அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெங்களூர் ஆலோசனைக் கூட்டம்: பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், இதில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முதல் நாள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டம் தொடர்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தியே இந்த முறையும் கூட்டணிக்குத் தலைவராகத் தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் என நாட்டின் பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய பெயர்: இந்தக் கூட்டணிக்கு புதிய பெயரை வைக்கும் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. "இந்தியா" என்ற வார்த்தை இருப்பது போல கூட்டணிக்கு ஒரு பெயரை பரிந்துரைக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணிக்கு "United we stand" என்ற டேக் லைன் இருக்கும். மேலும், பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் இப்போது விவாதிக்கப்படுகிறது. மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை இப்போது பேச வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்விட்டரில், "சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேச நலன் ஆகியவை மீது அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். வெறுப்பு, பிரிவினை, பொருளாதார சமத்துவமின்மை போன்ற எதேச்சதிகார மற்றும் மக்கள் விரோத அரசியலில் இருந்து இந்திய மக்களை விடுவிக்க விரும்புகிறோம். .. இந்த இந்தியாவுக்காக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications