நடுவானில் அச்சுறுத்தலாம்.. ‛ஆட்டிசம்’ சிறுவனுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு.. பரபர பெங்களூர்
பெங்களூர்: பைலட் மற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார் எனக்கூறி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த சம்பவம் பெங்களூர் விமான நிலையத்தில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் பாபுசாப்பாளையாவில் வசித்து வரும் தம்பதி தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையை மாலத்தீவில் கொண்டாட விரும்பினர். இதையடுத்து அந்த தம்பதி தங்களின் 2 மகன்களுடன் இலங்கை வழியாக மாலத்தீவு செல்ல முடிவு செய்தனர். இதற்காக விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து கொண்டனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூஎல் 174 விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குடும்பம் 2 மகன்களுடன் விமானத்தில் பயணிக்க மே மாதம் 16ம் தேதி பெங்களூர் விமான நிலையத்துக்கு சென்றது. இதில் ஒரு மகனின் வயது 15 ஆகும்.
விமான நிலையத்தில் அவர்கள் வழக்கமான சோதனைகளுக்காக காத்திருந்தனர். இந்த வேளையில் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்கள் பயணிக்கும் விமான ஊழியர்கள் 2 பேர் வந்து தம்பதியிடம் பேசினர். அப்போது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது மகன் குறித்து விசாரித்தனர். அவருக்கு மொபைல் ஆப் மூலம் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த சிறுவனை விமானத்தில் அனுமதிக்க முடியாது. அவர்களால் சகபயணிகள் மற்றும் பைலட்டுகளுக்கு அச்சுறுத்தல் அல்லது பிரச்சனை ஏற்படலாம் எனக்கூறினர்.
இதற்கு சிறுவனின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது மகனுக்கு மத்திய அரசு வழங்கிய யூடிஐடி அடையாள அட்டை உள்ளது. அவனால் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. அவனை விமானத்தில் அனுமதிக்க வேண்டும் என் மகன் யாருக்கும் இடையூறு செய்வது இல்லை. இதற்கு முன்பு கூட துபாய்க்கு சென்று வந்தோம். அவனால் தொல்லை எதுவும் நிகழாது'' என கெஞ்சியும், கதறியும் கூறினார். ஆனால் ஊழியர்கள் கேட்கவில்லை. மாறாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் சான்று வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர்.
மேலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து விமான நிலைய ஊழியர்களுக்கு இதுபற்றி சிறுவனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விமான நிறுவனத்திடம் பேசினார். அப்போது விமான ஊழியர்கள் சமாதானம் அடைந்தனர். சிறுவனுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்த யூடிஐடி கார்டு உள்ளிட்ட விபரங்களை பெற்று கொண்டு 2 மணிநேரத்துக்கு பிறகு விமானத்தில் பயணிக்க அனுமதித்தனர்.
இதற்கிடையே தான் இந்த சம்பவத்துக்கு அந்த சிறுவனின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‛‛ஆட்டிசத்தை காரணம் காட்டி என் மகனை விமானத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் இந்த விஷயத்தை அவன் முன்னாலேயே என்னிடம் கூறினர். இதனால் அவன் பயந்துவிட்டான். இந்த சம்பவம் என்னையும், எனது குடும்பத்தையும் மனதளவில் பாதித்துள்ளது'' என்றார். மேலும் மாலத்தீவில் இருந்து திரும்பிய அவர் சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு. அதாவது ஆட்டிசம் பாதித்த குழந்தையால் தகவல் பரிமாற்றத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். மேலும் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது உள்ளிட்ட விஷயங்களையும் கூட சரியாக செய்ய முடியாமல் போகலாம். மேலும் அவர்கள் மந்த நிலையிலேயே இருப்பார்கள். இதுதான் ஆட்டிசம் பாதிப்பாகும். இந்தியாவில் தற்போதும் ஆங்காங்கே சில குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இவர்களால் பெரிய அளவில் யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications