பரபரப்பு.. இலவச பால் தருவதில் மோதல்.. தட்டிக் கேட்ட பெண்.. கடும் சண்டை.. சரமாரி கத்தி குத்து!
பால் ஊற்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தப்பட்டார்
பெங்களூரு: இலவச பால் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.. இது தொடர்பாக 2 பெண்கள் உட்ப 10 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்ளூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள வி விகிரி என்ற பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் அந்த பகுதி மக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் இலவச பால் விநியோகம் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து வருகிறார். ஆனால் எல்லோருக்கும் இந்த இலவச பாலைக் கொடுப்பதில்லையாம்.

தனக்கு வேண்டியவர்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டும் இவர் பால் ஊற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் கோபமடைந்து இந்த செயலை தட்டி கேட்டார்.. அதனால் நாகராஜுக்கும், குமாருக்கும் தகராறு வெடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நாகராஜ் வழக்கம் போல தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பால் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.. அப்போது குமாரின் உறவினர் லலிதா என்பவர் பால் வாங்க செல்லும்போது, நாகராஜின் இந்த போக்கை கண்டித்து தட்டி கேட்டுள்ளார்.. இது மீண்டும் தகராறாக உருவெடுத்தது. அதற்குள் இரு தரப்பிலும் ஆதரவாளர்கள் கூடிவிட்டதால் கைகலப்பு வரை சென்றது.
அப்போது, நாகராஜின் ஆதரவாளர்கள் குமாரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டதாக கூறப்படுகிறது.. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமாரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. தற்போது குமார் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகிறார்.. இது சம்பந்தமாக போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குமாரை குத்தியதாக 2 பெண்கள் உட்பட 10 பேரையும் கைது செய்துள்ளனர். இதே பகுதியில் ஏற்கனவே ஒரு சம்பவம் இதுபோல் நடந்துள்ள நிலையில், இது 2வது வன்முறை நிகழ்வாகும். நாளுக்கு நாள் லாக்டவுன் பிரச்சனையால் வன்முறைகள் பெருகி வருவது மக்களுக்கு கவலையை தந்து வருகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை!












Click it and Unblock the Notifications