கலக்கலாக தொடங்கியது பெங்களூர் ஏரோ இந்தியா.. எஃப் 35 முதல் தேஜஸ் வரை.. வியந்து பார்க்கும் உலக நாடுகள்
பெங்களூரில் ஏரோ இந்தியா 2023 மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் இடம்பெற்றிருந்த பல விமானங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.
Recommended Video
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. இது ஒரு பக்கம் இருக்கக் கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதனைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த நிலையில், வரும் பிப். 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ஏரோ ஸ்பேஸ் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் காட்சிப்படுத்தப்பட்ட விஷயங்களை விரிவாகப் பார்க்கலாம்.

ஏரோ இந்தியா
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் காட்சி ஏரோ இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.. இந்தாண்டு பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள ஏரோ இந்தியா 2023, பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.. இந்தாண்டு 'The runway to a billion opportunities' என்ற கருப்பொருளில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிற நவீனத் தொழில்நுட்பங்களை உலகிற்குத் தெரியப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

பல உலக நாடுகள்
பெங்களூரில் 14ஆவது ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 1996 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் நடைபெறுவது நினைவுகூரத்தக்கது. பெங்களூர் யெலஹங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அதிநவீன விமானங்கள் இந்தக் கண்காட்சியில் சாகசங்கள் நிகழ்த்துகின்றன. இது மட்டுமின்றி சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் என மொத்தம் 800 பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன.

விமான சாகசங்கள்
இந்த கண்காட்சியில் ப்ளைபாஸ்ட் (flypast) எனப்படும் போர்விமானங்கள் கூட்டாகச் சாகசங்களில் ஈடுபடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.. இந்திய விமானப்படை தலைமை ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதரி இதற்குத் தலைமை தாங்கினார்.. ஃப்ளைபாஸ்ட், குருகுல், நேத்ரா, அர்ஜுன், ஏரோ, திரிசூல் என 5 வகை ஃபார்மேஷன்கள் செய்து காண்பிக்கப்பட்டது.. இந்த கண்காட்சியில் உள்நாட்டுப் போர் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலரக தாக்குதல் ஹெலிகாப்டர்-ஆன எல்சிஹெச் பிரசாந்த் ஹெலிகாப்டரில் பறந்தார்.

ஹனுமான் படம்
இது மட்டுமின்றி சுகோய் சு-30எம்கேஐ, எல்சிஎச் பிரசாந்த், சூர்யா கிரண் ஏரோபாட்டிக் டீம், எல்சிஏ தேஜாஸ், சி17 குளோப்மாஸ்டர் உள்ளிட்ட விமானங்களும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.. மேலும், மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சூப்பர்சோனிக் டிரைனர் ஏர்கிராப்ட்டான HLFT-42 முழு மாதிரியும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.. இந்த HLFT-42 அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு சூப்பர்சோனிக் விமானமாகும். இதன் வால் பகுதியில் "the storm is coming" என்ற வரியும் ஹனுமான் புகைப்படம் இடம் பெற்றிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆளில்லா போர் விமானம்
அடுத்தாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தபஸ்-BH UAV.. 12 ஆயிரம் அடி உயரத்தில் இது பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ பலரையும் வியக்க வைத்தது.. இந்த தபஸ் ஒரு ஆளில்லா விமானமாகும்.. பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இணைந்து தயாரித்து உள்ள இந்த ஆளில்லா விமானம் ரஸ்டம் 2 என்றும் அழைக்கப்படுகிறது.. 35 ஆயிரம் அடி உயரத்தில் அதிகபட்சம் 224 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய இந்த விமானம், 24 மணி நேரம் வரை பறந்து கொண்டே இருக்கும்.. இதனால் 350 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த ராணுவம், விமானப்படை, கப்பல் படை என்று முப்படைகளிலும் இந்த விமானம் வர உள்ளது.

அதிநவீன எஃப்-35 போர் விமானங்கள்
ஐந்தாம் தலைமுறை விமானத்திலேயே மிக நவீனமான எஃப்-35 போர் விமானத்தை அமெரிக்கா நமது ஏரோ இந்தியா 2023இல் காட்சிப்படுத்தியிருந்தனர்.. அமெரிக்காவின் எஃப்-35 இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஹில் ஏர் போர்ஸ் பேஸ், அலாஸ்காவில் உள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்த எஃப்-35 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. ஒற்றை இருக்கை கொண்ட இந்த விமானத்தால் அனைத்து பருவநிலைகளிலும் செயல்பட முடியும். ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானத்தை லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது..

துல்லிய தாக்குதல்
இதனால் தரை மற்றும் வானில் இருக்கும் இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும்.. எதிரி விமானங்களை வழிமறித்தல், வான் எல்லையைக் கண்காணிப்பது என பல்வேறு விதங்களிலும் இந்த எஃப்-35 போர் விமானத்தால் செயல்பட முடியும்.. வரலாற்றிலேயே மிக அதிக தொகையில் 400 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த விமானம் தயார் செய்யப்பட்டுள்ளது. விமானத்துறையில் இந்தியாவுக்குப் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்தத் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நல்ல ஒரு கூட்டணி உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு











Click it and Unblock the Notifications