ரூ.40 லட்சம் சம்பளம்.. டிகிரி & அனுபவம் எதுவும் வேண்டாம்! பெங்களூர் AI கம்பெனி அதிரடி! நோட் பண்ணுங்க
பெங்களூர்: இந்த காலத்தில் 2, 3 டிகிரி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நம்மைச் சுற்றியே பலரை இதுபோல பார்த்து இருப்போம். ஆனால், இங்குப் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் ஓகே ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் நாங்கள் தரோம் என வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் ஐடி நிறுவனங்களின் தலைநகர் என்றால் அது பெங்களூர் தான். பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெங்களூரில் தான் இருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் தான் ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

ஏஐ நிறுவனம்
அப்படி தான் பெங்களூரைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பது குறித்த வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுமாம்.. ஆனால், கல்லூரி படிப்பு கூட தேவையில்லை என அறிவித்துள்ளதே பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில், இதற்கு நெட்டிசன்கள் பல வித கருத்துகளைக் கூறிவருகிறது.
ரூ 40 லட்சம் சம்பளம்
ஸ்மால்லஸ்ட் ஏஐ (Smallest AI) என்ற ஸ்டார்ட்அப் கம்பெனியின் நிறுவனர் சுதர்சன் காமத் இது குறித்த அறிவிப்பைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு ஃபுல்-ஸ்டாக் இன்ஜினியரை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆண்டு சிடிசி சம்பள பேக்கேஜாக ரூ.40 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள வித்தை விளக்கியுள்ள அவர், "சம்பளத்தில் ஆண்டுக்கு ரூ.15-25 லட்சம் அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். இது மட்டுமின்றி கூடுதலாக ஆண்டுக்கு ரூ.10-15 லட்சம் ESOP (பணியாளர் பங்கு உரிமைத் திட்டம்) ஆக வழங்கப்படும்.. 0-2 வருட அனுபவமுள்ளவர்கள் தேவை.. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கக் கல்லூரி படிப்பு கட்டாயம் இல்லை.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
வழக்கமாக அனுப்பும் ரெஸ்யூமுக்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றி 100 வார்த்தைகளில் சுய அறிமுக குறிப்பை அனுப்ப வேண்டும். மேலும், அவர்களின் சிறந்த பிராஜக்ட்களை இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்குத் தேர்வாகும் நபர் இந்திரா நகரில் பணியாற்ற வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் நேரில் வந்து வேலை செய்ய வேண்டும். வேலைக்குத் தேர்வானால் உடனடியாக பணிக்குச் சேர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் வேண்டாம்:
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. கல்லூரி படிப்பு வேண்டாம் என்பது ஓகே என்றாலும் 2 ஆண்டுகள் கூட அனுபவம் இல்லாத நபருக்கு ரூ. 40 லட்சம் வரை சம்பளம் என்பது கொஞ்சம் அதிகம் தான் என நெட்சன்கள் கூறி வருகிறார்கள். பொதுவாக கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் இதுபோல தான் டிகிரி இல்லை என்றாலும் கோடிங் ஸ்கில் இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். அதுபோல வேலைக்கு ஆள் எடுக்கவே பெங்களூர் ஸ்டார்ட் அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேநேரம் இன்னும் சிலர் இந்திரா நகரில் இருக்கும் செலவுகளைக் கணக்கிட்டால் இது ஓகே தான்.. எல்லா செலவுகளும் போகக் கடைசியில் மாதம் ரூ.20 ஆயிரம் தான் நிற்கும் என சப்போர்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார்கள். நீங்க சொல்லுங்க அனுபவமே இல்லை என்றாலும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் தருவது சரியா.. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!












Click it and Unblock the Notifications