திடீர் பல்டி.. பந்த்துக்கு ஆதரவு இல்லை என கூறி பெங்களூரை அலறவிட்ட வாட்டாள் நாகராஜ்! போலீஸ் அதிரடி
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் நடக்கும் நிலையில் அதற்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக அவரும், அவரது ஆதரவு கன்னட அமைப்பினரும் பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நிலையில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆதரவு அளிக்கவில்லை. இவர்கள் தனியாக வரும் 29ம் தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

29ம் தேதி சேர்ந்தே கர்நாடகா பந்த் நடத்துவதாக வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால் பெங்களூர் பந்த் அறிவித்த கர்நாடகா ஜல ரக்சனே சமீதி மற்றும் விவசாய அமைப்பினர் அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து இன்றைய பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.
மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடக்கும் பந்த் என்பது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். கடைகள், தியேட்டர்கள் மூடப்படும். அதோடு போக்குவரத்து என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பதால் பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு வழங்கிய பல அமைப்பினர் திடீரென பின்வாங்கினர். இன்றைய பந்த் மற்றும் 29 ம் தேதி நடக்கும் பந்த் என 2க்கும் ஆதரவு அளித்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நஅவர்கள் நினைத்தனர்.
இதனால் சில அமைப்புகள் இன்றைய பந்த்துக்கு பதில் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் இன்ற திடீர் ட்விஸ்ட்டாக வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது தலைமையிலான வெவ்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினர். பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அவர்கள் முயன்றனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே வாட்டாள் நாகராஜ், சாரா கோவிந்த், பிரவீன் செட்டி உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெங்களூரில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications