Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தையின் கனவு இல்லத்தை பாதுகாக்க! முழு வீட்டையும் 100 அடிக்கு நகர்த்திய பெங்களூர் பிரதர்ஸ்! எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனது தந்தையின் நினைவாக தங்களது வீட்டை 100 அடிக்கு பெங்களூரை சேர்ந்த சகோதரர்கள் நகர்த்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதை அறிய வேண்டுமா?

கிழக்கு பெங்களூரில் உள்ள துபரஹள்ளி பால்யாவை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு 3 அடுக்குகளை கொண்ட வீட்டை 11 லட்ச ரூபாய்க்கு கட்டினார். அதில் தனது இரு மகன்கள் தேவராஜ், வாசு, மனைவி சாந்தம்மா மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

bangalore offbeat

ஆனால் இந்த சந்தோஷம் 2 ஆண்டுகளுக்குத்தான் நிலைத்தது. ஆம்! எல்லப்பா 2004 ஆம் ஆண்டு காலமானார். இந்த வீடு சுமார் 1600 சதுர அடியில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இவர்களது வீடு இருக்கும் பகுதியில் போதுமான வடிகால் அமைப்பு இல்லாததால் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. மேலும் 2 அல்லது 3 அடிக்கு தண்ணீர் தேங்குமாம். இதனால் வீட்டை மாற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தேவராஜும் வாசுவும் முடிவு செய்தனர்.

அதாவது முழுவதுமாக இடித்துவிட்டு வடிகால்களுடன் வீட்டை கட்டலாம் என கருதினர். இந்த திட்டத்தை 70 வயதான தனது தாய் சாந்தம்மாவிடம் கூறிய போது அவர் கண்ணீர் விட்டார். தனது கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பார்த்து பார்த்து கட்டிய வீடு அது.

அந்த வீட்டில்தான் எல்லா சுக, துக்கங்களையும் பங்கு போட்டுக் கொண்டனர். அது மட்டுமல்லாமல் பல கஷ்டங்களுக்கு மத்தியில் சாந்தம்மா தனது பிள்ளைகளை அந்த வீட்டில்தான் வளர்த்தார். இதனால் அந்த வீட்டை இடிக்க வேண்டாம் என தாய் கூறிவிட்டாராம்.

அம்மா மீது இரு மகன்களுக்கும் பாசமும் பரிவும் உண்டு. இதனால் என்ன செய்யலாம் என யோசித்த போது அந்த வீட்டை அப்படியே 100 அடிக்கு தங்களது இடத்திலேயே ஷிப்ட் செய்ய என்ன செய்யலாம் என யோசித்தனர். அதன் படி ஸ்ரீராம் பில்டிங் லிஃப்டிங் எனும் நிறுவனத்துடன் ஆலோசனை செய்தனர்.

இந்த நிறுவனத்தின் ஓனர் விகாஸ் ரானாதான் வீட்டை நகர்த்தும் பணியை செய்தாராம். 200 இரும்பு கம்பிகள், 125 இரும்பு உருளைகள் உள்ளிட்டவைகளை கொண்டு அந்த வீட்டிற்கு எந்த சேதாரமும் ஏற்படாத வண்ணம் வீட்டை நகர்த்தும் பணிகள் நடந்தன.

இதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்களாம். உழைப்புக்கு பலன் என்பதை போல், எல்லப்பாவின் கனவு இல்லம் ஜன்னல், கதவுகளில் கூட சின்ன சேதமில்லாமல், நகர்த்திவிட்டனர். இதனால் தங்களது தந்தையின் நினைவு வீடும் பாதுகாக்கப்பட்டது. தாயின் ஆசையும் நிறைவேறியது.

தற்போது 15 அடிக்கு அந்த வீடு நகர்த்தப்பட்டது, அடுத்த 25 நாட்களில் மீதமுள்ள தூரத்தையும் கடந்து விடும் என்கிறார்கள். இந்த வீட்டை மாற்றும் நடைமுறைக்கு ரூ 10 லட்சம் ஆகுமாம். மேலும் சில புதுப்பிக்கும் பணிகள் செய்ய ரூ 5 லட்சம் கூடுதல் செலவாகும் என சொல்லப்படுகிறது.

தனது தாய், தந்தைக்காக 15 லட்சம் செலவு செய்து யார் மனமும் புண்படாத மாதிரி சகோதரர்கள் நடந்து கொள்வது அப்பகுதியில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+