Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா தடுப்பூசி செலுத்த வீடு வீடாக வரப்போகும் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள்.. 100% இலக்கு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் நகரத்தில் 84 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் விடுபட்டவர்களுக்கும் செலுத்தி 100 சதவீதம் என்ற மைல் கல்லை எட்ட மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக நேரில் சென்று விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளது பெருநகர் பெங்களூர் மாநகராட்சி (BBMP).

இதுகுறித்து பிபிஎம்பி, சுகாதார பிரிவு சிறப்பு ஆணையாளர் ரன்தீப் கூறுகையில், நாங்கள் இலக்கு வைத்து செயல்பட்டதில் பெரும்பான்மையோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். இனிமேல் எங்கள் வியூகத்தை மாற்ற வேண்டியுள்ளது. ஒரே இடத்தில் தடுப்பூசிகளை வைத்துக் கொண்டு காத்திருப்பதில் இனி பலன் கிடையாது. எனவே, மக்களை தேடி தடுப்பூசிகளை கொண்டு செல்ல உள்ளோம் என்று தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தேடி வர ஆர்வம் காட்டுவதில்லை. சோம்பேறித்தனம், முகாம்களில் கூட்டம் இருக்குமோ என்ற அச்சம், போன்றவை இதற்கு காரணங்கள். எனவே, பிளாக் மட்டத்தில் தடுப்பூசிகளை வீடுகளுக்கு நேரில் கொண்டு செல்ல முடிவு செய்துல்ளது பிபிஎம்பி.

முழு டேட்டா

முழு டேட்டா

ரன்தீப் மேலும் இதுகுறித்து கூறுகையில், திட மேலாண்மை பிரிவு இந்த நகரத்தை 4250 பிளாக்குகளாக பிரித்துள்ளது. அவர்களிடம், வரைபடம் உட்பட முழு டேட்டா உள்ளது. ஒவ்வொரு பிளாக்கிலும் 750 வீடுகளுக்கு தினந்தோறும் செல்வதை இலக்காக வைத்துள்ளோம். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களை ஒரு நாளில் ஒவ்வொரு பிளாக்கிலும், கவர் செய்வோம். இதுதான் எங்கள் திட்டம்.

மக்களுக்கு வாய்ப்பு

மக்களுக்கு வாய்ப்பு

படுக்கையில் இருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களால் முகாம்களுக்கு வர முடிவதில்லை. அவர்களுக்கு நாங்களே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த இந்த நடைமுறை வாய்ப்பாக அமையும். நிறைய பேர் போதிய ஆர்வம் இல்லாமலும், நேரம் கிடைக்காமலும்தான் வேக்சின் செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். வீடுகளுக்கே நாங்கள் தேடிப்போகும்போது, அவர்கள் தடுப்பூசி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குடிசைபகுதிகள்

குடிசைபகுதிகள்

மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி போட்டதும் ஏதாவது, பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனே சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்வோம் என்று உறுதியளித்தார். வீடு வீடாக போய் தடுப்பூசி செலுத்தப்போவதாக பிபிஎம்பி முடிவு செய்திருந்தாலும், குடிசைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினமான விஷயமாக உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.

விடுபட்ட நபர்கள்

விடுபட்ட நபர்கள்

பெங்களூர் நகரத்தில் 5 லட்சம் அளவுக்கு, குடிசைவாழ் மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வைக்க, கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், என்ஜிஓக்கள் உதவி தேவை என்கிறார்கள் பிபிஎம்பி அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+