எலக்ட்ரானிக் சிட்டியில் கேட்ட அலறல்.. பைக் டாக்சியில் போன பெண்ணுக்கு நடந்த கொடுமை! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் பைக் டாக்சியில் சென்ற பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்சி பிரபலமாக உள்ளது. கார், ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பைக் டாக்சியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
ஆனால் பெங்களூர், சென்னையில் பைக் டாக்சி இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை . அதாவது பைக்கை கமர்ஷியல் விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

பைக் டாக்சி
இதனால் பைக் டாக்சி என்பதே சட்ட விதிமீறல்தான். பைக் டாக்சிக்கள் இந்த விதி முறையையும் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த பைக் டாக்சிகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பெரிதாக கண்டுகொள்ளப்படுவது இல்லை. இந்த பைக் டாக்சி பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடியும். இதற்கு பணம் மிக குறைவு,. அதேபோல் டிராபிக்கில் எளிதாக செல்ல முடியும்.

பெங்களூர்
பெங்களூர் போன்ற டிராபிக் அதிகம் உள்ள, கேப்பிற்கு அதிகம் காசு கேட்கும் நகரங்களில் இந்த பைக் டாக்சிகள் அதிகம் உதவுகின்றன. இந்த நிலையில்தான் பெங்களூரில் பைக் டாக்சியில் சென்ற கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது தோழியை பார்த்துவிட்டு எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் வீட்டிற்கு பைக் டாக்சி புக் செய்துள்ளார். இரவில் அவர் பைக் டாக்சி செய்த நிலையில் அராபத் என்ற இளைஞர் பைக்கில் வந்து அவரை பிக் அப் செய்துள்ளார்.

என்ன நடந்தது?
எலக்ட்ரானிக் சிட்டியில் பாதி தூரம் பைக்கில் சென்றவர் ஷார்ட் ரூட் என்று சொல்லி வேறு இடத்திற்கு பைக்கை எடுத்து சென்றுள்ளார். அங்கே பாதி தூரம் சென்று பைக் வேலை பார்க்கவில்லை என்று கூறி அங்கே இருந்த வீடு ஒன்றில் உதவி கேட்பது போல கேட்டுள்ளார். அந்த பெண்ணும் இவரை நம்பி அங்கே நின்று இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த பெண்ணை வீட்டிற்குள் தள்ளி அராபத் கொடுமையாக தாக்கிஉள்ளார். அந்த வீடு அராபத்தின் பெண் தோழி ஒருவருடைய வீடு ஆகும்.

கொடுமை
அந்த வீட்டிற்கு உள்ளேயே வைத்து அந்த பெண்ணை அராபத் பலாத்காரம் செய்துள்ளார். கொடுமையாக தாக்கி அந்த பெண்ணை மயக்கம் அடைய செய்து அதன்பின் அரபாத் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இல்லாமல் தனது தோழன் சகாபுதீன் என்ற இளைஞரையும் போன் செய்து வரழைத்து இருக்கிறான். அவனையும் அங்கேயே வரவழைத்து, அவனும் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளான். இருவரும் மாறி மாறி அந்த பெண்ணை அங்கேயே கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்துள்ளனர். அதன்பின் வெளியே சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பி உள்ளனர்.

போலீஸ்
இந்த நிலையில் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பைக் டாக்சி விவரம், அவரின் போன் எண், வன்புணர்வு செய்யப்பட்ட வீடு ஆகியவற்றை வைத்து போலீசார் இருவரையும் அடையாளம் கண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரண்டு பேரும் இதற்கு முன்பே இதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications