Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர்வாசிகளை சத்தமின்றி காலி செய்யும் கொடூர நோய்.. புறாக்களால் நகரம் முழுக்க பரவும் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் சத்தமே இல்லாமல் ஒரு ஆபத்து பரவிக் கொண்டு இருக்கிறது. அங்கு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்போர் புறாக்களால் மிக மோசமான உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களாம். சமீபத்திய ஆண்டுகளில் இதுபோல புறாக்களால் மோசமான நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவின் ஐடி தலைநகராக அறியப்படும் பெங்களூருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகிறார்கள். இதனால் ஜன நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்பது அதிகரித்துவிட்டது. இதற்கிடையே அப்படி அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்போருக்குப் பெரிய ஆபத்து ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Bangalore Doctors Warns Rising Pigeon-Related Lung Diseases Hypersensitivity Pneumonitis Case Surge
Photo Credit:

நுரையீரல் பாதிப்பு

இதற்கிடையே பெங்களூரில் உள்ள நுரையீரல் நிபுணர்கள் சில முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். தங்கள் மருத்துவமனைகளில் புறா தொடர்பாக ஏற்படும் பாதிப்புகளால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரிதாக இருந்த புறா தொடர்பான நோய்ப் பாதிப்புகள், தற்போது சாதாரணமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெங்களூரில் புறாக்களால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

மருத்துவர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆண்டு கணக்கில் இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு அடைப்பு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்குப் பெரும்பாலும் புறா தொடர்பான நோய்கள் கண்டறியப்படுகின்றன. ரத்தப் பரிசோதனைகள் மூலம் புறா தொடர்பான நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிகிறோம். புறா அலர்ஜி இருக்கிறதா என்பதைப் பார்க்கத் தோல் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

குறிப்பாக உயரமான கட்டிடங்களில் வசிப்போருக்கே பாதிப்பு அதிகமாகத் தென்படுகிறது. உயரமான கட்டிடங்களில் புறாக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் தங்கள் அலுவலகம் இருப்போருக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய அறிகுறிகள்

இருமல், அலர்ஜிக் ரைனிடிஸ், ஆஸ்துமா ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. புறாக்களின் இறகுகள் மற்றும் கழிவுகளுடன் தொடர்ச்சியாகப் பல காலம் தொடர்பு இருந்தால் ஹைப்பர்சென்சிட்டிவிட்டி நியூமோனிட்டிஸ் எனப்படும் கடுமையான நுரையீரல் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம். இது நுரையீரலை இறுக்கி, சுருங்கச் செய்யும் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தும் என்பதால் மூச்சு விடவே கூட சிரமம் ஏற்படும். இந்தப் பாதிப்பு இருப்போரைச் சிகிச்சை மூலம் உடனடியாகக் குணப்படுத்த முடியாது. இந்த நோய்க்கு நீண்டகாலச் சிகிச்சை தேவைப்படலாம்.. சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்போர்ட் கூட தேவைப்படுமாம்.

புறாவால் பரவும் ஆபத்து

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் மேலும் கூறுகையில், "எனது மருத்துவமனைக்குச் சமீபத்தில் இளைஞர் ஒருவர் வந்தார். 35 வயதான அந்த இளைஞர் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். அவருக்குத் தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது. ஒர்க் பர்ம் ஹோமில் வேலை செய்து வந்த அவரின் உடல்நிலை தொடர்ச்சியாக மோசமடைந்து வந்துள்ளது. சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் இன்டர்ஸ்டிஷியல் நுரையீரல் நோய் கண்டறியப்பட்டது.

அவரது கட்டிடத்தின் காலியாக இருந்த இடங்களில் புறாக்கள் அதிகமாக இருந்தன. அதுவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புறாக்கள் அங்கு வராமல் செய்தவுடன் உடல்நிலை சீரானது. புறக்களை அகற்றிய உடனேயே அறிகுறிகள் குறைந்தன. புறாக்களுக்குத் தொடர்ச்சியாக உணவளிப்போருக்கும் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே கவனம் தேவை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+