பெங்களூர் மக்கள் கண்முன்னே நிஜமாக நடக்கப்போகுது "காந்தாரா".. கலகலக்கும் கம்பாலா
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இந்த வார இறுதியில் கம்பாலா போட்டி நடைபெறும் நிலையில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
பெங்களூரில் இந்த வாரம் கடலோர பகுதிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் கலாச்சார விளையாட்டான 'கம்பாலா'வை நடத்த படுஜோராக ரெடியாகி வருகிறது. இந்த கம்பாலாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கம்பாலா என்ற இந்த எருமை மாட்டுப் பந்தயம் பெங்களூர் நகரில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கடலோர கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய் உட்பட நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கம்பலா: இதற்காகக் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் இருந்து சுமார் 200 ஜோடி எருமை மாடுகள் தங்கள் உரிமையாளர்களுடன் பெங்களூருவுக்கு வரவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரண்மனை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சியையும் அவர்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த கம்பாலா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதை அவர்கள் மறுத்துள்ளனர். டிக்கெட்களை விற்பனை செய்ய எந்தவொரு திட்டமும் இல்லை என்ற போட்டி ஏற்பாட்டாளர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி நடக்கும் நிலையில், அதை யார் வேண்டுமானாலும் நேரடியாக வந்து பார்க்கலாம் என்று தெளிவுபடுத்தினர்.
தமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன?
பிரபலங்கள்: ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா ஷெட்டி, ஷில்பா ஷெட்டி, கே.எல்.ராகுல், சுனில் ஷெட்டி என பலருக்கும் இந்த இந்த பிரமாண்ட நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதில் உள்ள மெயின் ஸ்டேஜுக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மொத்தம் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெங்களூரு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பாலா என்றால் என்ன: கம்பாலா என்பது கர்நாடகாவில் கடலோர பகுதிகளில் பிரபலமாக உள்ள ஒரு விளையாட்டாகும். அங்கே குளிர்காலத்தில் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களை அறுவடை செய்யும் போது நடத்தப்படும் எருமை பந்தயமே கம்பாலா என்று அழைக்கப்படும். இந்த பந்தயம் மண் மற்றும் தண்ணீரை கொண்ட டிராக்குகளில் நடக்கும். ஒரு நேரத்தில் இரண்டு டீம்கள் களமிறங்கும் ஒவ்வொரு ஜோடி எருமை மாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தி ஓட்ட 'கம்பாலா ரன்னர்' ஒருவரும் உடன் இருப்பார்.
வெற்றி பெறும் அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாகப் போட்டிகள் நடத்தப்படும். சாம்பியன் யார் என்று நிர்ணயம் செய்யப்படும் வரை இரு டீம்களுக்கு இடையே போட்டி நடைபெறும்.
இதில் யார் முதலில் வருகிறார்கள் என்பதை மட்டுமே வைத்து எப்போதும் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுவது இல்லை. எருமை மாடுகள் ஓடும் போது, எந்தளவுக்கு நீர் தெளிக்கிறது என்பதும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சில போட்டிகளில் இப்படித் தெறித்த நீர் அடிப்படையிலும் கூட வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை 'கொலு' என்று அழைப்பார்கள்.
வெற்றி முக்கியம்: கம்பாலா பந்தயத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகவும் கவுரவம் சார்ந்ததாகவும் பார்க்கப்படும். இந்த போட்டிக்காகவே அந்த எருமை மாடுகளுக்கு ஆண்டு முழுவதும் சிறப்பு கவனிப்பும் இருக்கும்.
கன்னட திரைப்படமான 'கந்தாரா’ இந்த விளையாட்டை காட்டியிருக்கும். அந்தப் படம் மெகா ஹிட் ஆன நிலையில், அதன் பிறகு கர்நாடகாவுக்கு வெளியே இந்த விளையாட்டு குறித்து அனைவரும் தெரிந்து கொண்டார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications