இளம்பெண்களின் உள்ளாடையை திருடி.. சுய இன்பம் செய்த இளைஞர்! பகீர் சம்பவம்.. ஷாக் ஆன பெங்களூர்வாசிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இந்த பாலியல் குற்றங்கள் பெண்களை ஆண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. பெண்களை சக நபராகப் பார்க்காமல் பாலியல் சார்ந்து மட்டுமே பார்ப்பதால் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கிறது.

Bangalore Man Caught Stealing Womens Innerwear and Masturbating on Terrace

பெங்களூர்: பெருநகரங்களில் கூட பெண்களுக்கு எதிராக அத்துமீறும் நடவடிக்கை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரின் லாகரே அருகே உள்ள விதான சவுதா லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய இளைஞன் ஒருவர், மொட்டை மாடியில் சுய இன்பம் செய்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத அந்த நபர் வாடகை வீடு தேடுவது போல அங்கே வந்துள்ளார். மேலும், அங்குப் பெண்கள் குளிப்பதையும் அவர் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மாடியில் அந்த நபர் கேவலமான செயல்களில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

சைக்கோ இளைஞன்: இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜகோபால்நகர் போலீசார், அந்த நபரைத் தேடும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "இந்த நபர் ஆண்கள் இல்லாத அல்லது பெண்கள் தனியாக வசித்து வரும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் நுழைவான். வீடு வாடகைக்குத் தேடுவதாகக் கூறி உள்ளே புகுந்துவிடுவான்.

உள்ளே சென்றதும் அந்த நபர் டாய்லெட்டில் தான் அதிக நேரம் செலவிடுவார். அதைத் தொடர்ந்து அழுக்கு துணிகள் இருக்கும் இடம் அல்லது துவைக்கப்பட்ட துணிகள் வைக்கப்பட்ட இடத்திற்குச் செல்வான். அங்கே, பெண்களின் ஆடைகளைக் குறிப்பாக உள் ஆடைகளைத் திருடுவான்.. இதை வைத்து கேவலமான செயல்களைச் செய்வான். அந்த நபரை இப்போது தேடி வருகிறோம்" என்றார்.

அருவருக்கத்தக்கச் செயல்: அந்த சைக்கோ இளைஞர் துவைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பெண்ணின் உள்ளாடையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு சுய இன்பம் கொள்கிறார். இதை அங்கே மறைந்திருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது பரவும் நிலையில், இதுவும் போலீசாருக்கு ஒரு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நபரைத் தேடும் பணிகளில் போலீசார் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.

கடந்த 2022இல் இதேபோன்ற ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. அங்கு குவாலியரில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதாக ஒருவரைக் கைது செய்யப்பட்டார். அந்த நபர் பெண்களின் உள்ளாடையையும் 500 ரூபாயையும் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அது தொடர்பான வீடியோவும் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+