Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் நர்ஸ்.. 50 வயதில் தடுமாறிய கணவன்.. சுவரில் படிந்த மனைவியின் தலை.. பெங்களூரு புறநகரில் பரபர

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம், தொட்டபள்ளாப்புரா அருகே உள்ளது நெரலகட்டே என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் லட்சுமணா.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ராதாம்மா.. 42 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள்.. இதில், மூத்த மகன் உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டார்.

Bangalore Bengaluru Rural District

குடிகார கணவர்

லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார்... ராதாம்மா அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.. லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.. தினமும் குடித்துவிட்டு, ராதாம்மாவுடன் தகராறு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்..

இப்படித்தான் நேற்று முன்தினமும் மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணா, ராதாம்மாவுடன் தகராறு செய்துள்ளார்.. பிறகு திடீரென்று ராதாம்மாவை கண்மூடித்தனமாக அடித்து தாக்க துவங்கினார்.. ஒருகட்டத்தில், ராதாம்மாவின் தலையை பிடித்து, சுவரில் வேகமாக முட்டியிருக்கிறார். இதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டி, ராதாம்மா அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

திரண்டு வந்த கிராம மக்கள்

போதை தெளிந்ததுமே, சடலத்தை பார்த்து பதறிப்போனார் லட்சுமணா.. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், ராதாம்மா வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக உறவினர்களிடமும், கிராம மக்களிடமும் சொல்லி அழுதார்.. இதைக்கேட்டு மொத்த பேரும் திரண்டு வந்து ராதாம்மாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.. பிறகு ராதாம்மாவின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்றன.

ஆனால், அந்த நேரம் பார்த்து, தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு, யாரோ ஒருநபர் போன் செய்து, லட்சுமணா தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாகவும், போலீசாருக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு நடத்த முயற்சிப்பதாகவும் தகவல் தந்துள்ளார்.

அவசர அவசரமாக இறுதிச்சடங்கு

இதனால் போலீசார், நெரலகட்டே கிராமத்திற்கே நேரடியாக கிளம்பி வந்தனர்.. லட்சுமணாவிடம், மனைவி இறந்தது குறித்து கேட்டனர். அப்போதும், கீழே விழுந்து இறந்துவிட்டார் என்று சொன்னார். இதற்கு பிறகுதான், போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது மனைவியை கொன்றுவிட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டார்..

அதாவது, ராதாம்மாவின் நடத்தை மீது ஆரம்பத்திலிருந்தே லட்சுமணாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. எப்போதுமே மனைவியை சந்தேகப்பட்டு கொண்டேயிருப்பாராம்..

பரபர வாக்குமூலம்

குடும்ப சூழலுக்காக, தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக இருந்ததால், இந்த சந்தேகம் கணவனுக்கு அதிகமாகியிருக்கிறது.. இதனால் தினந்தோறும், ராதாம்மாவை சந்தேகப்பட்டு, குடிபோதையில் அடித்து உதைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று, தகராறு அதிகமாகி, ராதாம்மாவின் தலையை பிடித்து சுவற்றில் மோதியதில் இறந்துவிட்டதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் லட்சுமணா.

இதனிடையே, தன்னுடைய மூத்த மகன் இறந்த பிறகு, ராதாம்மாவும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக அந்த கிராம மக்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான லட்சுமணாவிடம் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+