Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிரண்டுன்னு நம்பினால்.. செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா பொருத்தி பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்த நபர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: செல்போன் சார்ஜரில் வைக்கப்பட்ட ஸ்பை கேமராவின் மூலம் பெண்ணின் நிர்வாண வீடியோவை எடுத்து அவரை உடலுறவுக்கு அழைத்து மிரட்டி வந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்

    பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் காலம் காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, இதுபோன்ற குற்றங்களும் கூடவே சேர்ந்து பெருகி விடுகின்றன.

    இதுபோல் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயந்து பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    பெங்களூரில் சம்பவம்

    பெங்களூரில் சம்பவம்

    அப்படியொரு மிரட்டல் சம்பவம்தான் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் மகேஷ் (28). பொறியியல் பட்டதாரியான இவர், அங்கு சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணுக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    வீட்டில் தங்க அனுமதி

    வீட்டில் தங்க அனுமதி

    இந்த சூழலில், கடந்த மாதம் பெங்களூருவுக்கு வந்த மகேஷ், அப்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது வேலை விஷயமாக பெங்களூருவுக்கு தான் வந்துள்ளதாகவும், ஒரு நாள் மட்டும் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார். சரி., நண்பர்தானே என நினைத்து அப்பெண்ணும் அனுமதித்துள்ளார்.

    பெட்ரூமில் சார்ஜர்

    பெட்ரூமில் சார்ஜர்

    அந்த சமயத்தில்தான், தனது வேலையை மகேஷ் காட்டியுள்ளார். தான் கொண்டு வந்த 'ஸ்பை' கேமராவுடன் கூடிய செல்போன் சார்ஜரை வீட்டின் பெட்ரூமில் உள்ள ஸ்விட்ச்போர்டில் மாட்டியுள்ளார். பின்னர் வேலை விஷயமாக செல்ல வேண்டும் எனக் கூறி மகேஷ் வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாலை வீடு திரும்பிய மகேஷ், மைசூர் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    பேஸ்புக் அக்கவுண்டில் மிரட்டல்

    பேஸ்புக் அக்கவுண்டில் மிரட்டல்

    இந்நிலையில், அவர் கிளம்பிய சில நாட்களில் அப்பெண்ணுக்கு ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "உனது நிர்வாண வீடியோ என்னிடம் இருக்கிறது. என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுவேன். மறுத்தால், ஃபேஸ்புக்கில் போட்டு விடுவேன்" எனக் கூறப்பட்டிருந்தது.

    ஆபாச வீடியோ

    ஆபாச வீடியோ

    முதலில், இது ஒரு 'பிராங்க்' ஆக இருக்கலாம் என நினைத்த அந்தப் பெண் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் அதே ஃபேஸ்புக் ஐ.டி.யில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு வீடியோ வந்திருந்தது. அதில் அவர் உடை மாற்றும் காட்சிகள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

    நம்பிக்கை துரோகி

    நம்பிக்கை துரோகி

    இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் கணக்கு எங்கிருந்து இயங்குகிறது என்பதை கண்காணித்தனர். அப்போது அது மைசூரில் இருந்து இயங்குவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட முகவரிக்கு சென்ற போலீஸார், அங்கிருந்த மகேஷை கைது செய்தனர். விசாரணையில், அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி செய்துவிட்டதாக அவர் கூறினார். ஸ்மார்ட்போன்களும், இணையதள தொழில்நுட்பமும் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், பெண்கள் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+