Bangalore: வண்டியை மோதவிட்டு கொன்னுடுவேன்.. போதையில் பயணிகளை மிரட்டிய பெங்களூர் ஆம்னி பஸ் டிரைவர்.. வீடியோ
பெங்களூர்: பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து பேருந்தில் டிரைவர் புல் போதையில் தாறுமாறாக வண்டியை ஓட்டிச்சென்றது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பயணிகள் ஒட்டு மொத்தமாக திரண்டு வண்டியை நிறுத்த சொன்னபோதும், நிறுத்த மறுத்து தொடர்ந்து பேருந்தை இயக்கியதால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சொந்த ஊர்களுக்கோ, அலுவல் காரணமாக தொலைதூர நகரங்களுக்கு செல்வதாக இருந்தால், ரயிலில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்பி பயணிப்பதை பார்க்க முடிகிறது. சொகுசு மற்றும் விரைவு காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகளில் விலை சற்று கூடுதல் இருந்தாலும் பயணிகள் அதிகம் சென்று வருவதை பார்க்க முடிகிறது.

ஆம்னி பஸ் டிரைவர்
ஆனால் சில பேருந்து டிரைவர்கள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் இயக்குவது என தங்களை நம்பி வரும் பயணிகளை பற்றி துளியும் கவலைப்படாமல் நடந்து கொள்வது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிக் பாஸ் பார்த்துக்கொண்டே நள்ளிரவில் ஆம்னி பஸ் டிரைவர் பேருந்தை இயக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிப் பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. பெங்களூரில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தாறுமாறாக சென்ற பஸ்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு பாரதி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது, பேருந்து தாறுமாறாக ஓடுவதை பயணிகள் கவனித்துள்ளனர். இது குறித்து டிரைவரிடம் கேட்ட போது குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதனால் அச்சம் அடைந்த பயணிகள் வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத டிரைவர் வாகனத்தை தொடர்ந்து இயக்கினார். டிரைவரின் உதவியாளர் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார். "தயவு செய்து பேருந்தை நிறுத்துங்கள், நாங்கள் இறங்கி வேறு பேருந்திலாவது செல்கிறோம்" என்று பயணிகள் கேட்ட போதும், அடாவடியாக பேசியதோடு பேருந்தை நிறுத்த மறுத்து இயக்கிச் சென்றார்.
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தக் காட்சிகளை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கேப்ஷனில், "பாரதி பஸ் ஆபரேட்டர்ஸ் நிறுவனத்தின் மோசமான பஸ் சேவை இது. பெரும்பாலான விபத்துகள் இப்படித்தான் நடக்கின்றன. டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருவருமே போதையில் இருப்பது தெரிகிறது. பயணிகளின் உயிருடன் இப்படிப் பட்ட பேருந்து நிறுவனங்கள் விளையாடுகின்றன. கடுமையான நடவடிக்கையை போக்குவரத்து துறையினர் எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
உங்களை கொன்று விடுவேன்
கடந்த 25 ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். பயணி ஒருவர் கூறுகையில், "இதே போன்ற ஒரு அனுபவம்தான் எனக்கு கல்லடா டிராவல்ஸ் நிறுவனத்தில் கிடைத்தது. இது ரொம்பவே ஆபத்தானது. நீண்ட பயணம் செய்யும் போது இதையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "நான் இந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். டிரைவர் முழுவதுமாக குடிபோதையில் இருந்தார். தாறுமாறாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் பேருந்தை நிறுத்தச் சொன்ன போது நிறுத்த மறுத்ததோடு, 'பேருந்தை மோதவிட்டு உங்களை கொன்று விடுவேன்' என மிரட்டினார். எப்படியோ டோல் கேட்டில் பேருந்தை நிறுத்த வைத்தோம். உடனடியாக டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications