பெங்களூர் குண்டு வெடிப்பு.. தொப்பியுடன் கூலாக சென்ற சந்தேக நபர்.. வெளியான புதிய திடுக் தகவல்
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேக நபரின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹோட்டலுக்கு பையுடன் வரும் அந்த நபர்.. திரும்பி செல்லும் போது வெறுங்கையுடன் செல்கிறார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது நேற்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சி வெளியீடு: ஹோட்டலில் குண்டு வெடிக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் கை கழுவும் பகுதியில் தான் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. பெங்களூரு நகரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர் போல வந்த ஒருவர் ரவா இட்லி ஆர்டர் செய்துவிட்டு அதை வாங்காமலே சென்றது சிசிடிவியில் தெரியவந்தது.
தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை: வெடிகுண்டு அடங்கிய பையை கைகழுவும் பகுதி அருகே வைத்து சென்றது இந்த நபராக இருக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஹோட்டலில் இருந்து தொப்பி அணிந்த படி சந்தேக நபர் வெளியே செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. கஃபே ஓட்டல் அருகே ஒரு பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ் ஒன்றில் இருந்து இறங்கிய சந்தேக நபர் ஹோட்டலுக்கு செல்கிறார். வரும் போது கையில் பையுடன் வந்த நபர்.. செல்லும் போது வெறும் கையோடு செல்லும் காட்சியும் சிக்கியுள்ளது. தொப்பி அணிந்தபடி செல்லும் இந்த இளைஞர் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன? என்பது குறித்து தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை நடைபெற்று வருகிறது.
ஷாரிக், அவரது கூட்டாளியிடம் விசாரணை: மங்களூர் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களே இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் மற்றும் அவனது கூட்டாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஷாரிக் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெங்களூரில் நேற்று முதலே பரபரப்பான சூழல் நிலவுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications