பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் வெங்கடராயனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனிந்திரா என்பவரும் வர்ஷா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு வர்ஷா, முனிந்திராவிடம் விசித்திரமாக நடந்து கொண்டாராம். திருமணமான ஓராண்டில் காதல் கணவனை மர்ம உறுப்பில் மிதித்து காலி செய்ய முயன்றாராம். தொடர்ந்து அவரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் வெங்கடராயனகோட்டை கிராமத்தை சேர்ந்த முனிந்திரா என்பவரும் அதேபகுதியை சேர்ந்த வர்ஷா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி முனிந்திராவும், வர்ஷாவும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் தனியாக வசித்து வந்துள்ளார்களாம்.

வர்ஷா நடந்து கொண்ட விதம்
இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு வர்ஷா, முனிந்திராவிடம் விசித்திரமாக நடந்து கொள்ள தொடங்கினார். எந்த காரணமும் இன்றி அடிக்கடி முனிந்திராவுடன் தகராறு செய்து வந்தாராம். திருமணமாகி சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
மர்ம உறுப்பில் மிதித்தார்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி காலையும் தனது கணவருடன் வர்ஷா தகராறு செய்துள்ளார். அப்போது முனிந்திராவின் ஆடைகளை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டாராம். அதன்பிறகு முனிந்திரா வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து இரவில் வீட்டுக்கு வந்த அவர், உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் மீண்டும் கணவருடன் வர்ஷா தகராறில் ஈடுபட்டாராம். அப்போது தூங்கி கொண்டிருந்த முனிந்திராவின் மர்ம உறுப்பில் வர்ஷா காலால் எட்டி மிதித்துள்ளார். இதனால் முனிந்திரா வலியால் கதறி துடித்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தடுத்த குடும்பத்தினர்
இதற்கிடையே நேற்று காலை மருத்துவனையில் உள்ள தனது கணவரை பார்க்க வர்ஷா வந்துள்ளார். அப்போது முனிந்திராவை பார்க்கவிடாமல் அவரது குடும்பத்தினர் வர்ஷாவை தடுத்தார்களாம். இதனால் மனமுடைந்த வர்ஷா, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, தான் வைத்திருந்த மருந்தை குடித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றாராம். பின்னர் அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி














Click it and Unblock the Notifications