Bangalore: 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்ய உறவில் ஈடுபடாத கணவன்.. புதுப்பெண் செய்த காரியத்தால் அலறிய மாப்பிள்ளை
பெங்களூர்: திருமணமாகி 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாததால் ரூ.2 கோடி சொத்து கேட்டு புதுப்பெண் மிரட்டுவதாக போலீசில் கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எனது தொழில்முறை வாழ்க்கை மற்றும் மன அழுத்தத்தால் என்னால் உறவில் ஈடுபட முடியவில்லை என்று தன் மனைவியிடம் பலமுறை கூறி வந்தாலும், அவர் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் என்னை தொடர்ந்து அவமானம் செய்து வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை
திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் கணவன் இல்லற வாழ்வில் ஈடுபடாததால், தன்னிடம் இருந்து ரூ.2 கோடி சொத்து கேட்டு மனைவி மிரட்டியதாக கூறி கணவன் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பெங்களூர் கோவிந்தராஜ் பகுதியில் பிரேம் - நவீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அதாவது, கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. ஆனால், முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரேம், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லப்படுகிறது.
கணவருக்கு மருத்துவ பரிசோதனை
இதனால் விரக்தி அடைந்த நவீனா, தனது கணவரை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தார். இதில், பிரேமிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும், மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தாராம். இதனால், இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு பிரேமிற்கு மருத்துவர் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
ஆனாலும் பிரேமின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பெரும் கனவுடன் வந்த நவீனாவிற்கு கணவரின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளித்தது. இதனால், தனது வேதனையை வீட்டில் கொட்டி தீர்த்துள்ளார். கோபம் அடைந்த நவீனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி பிரேமை தாக்கியதாக கூறப்படுகிறது.
மனைவி வீட்டினர் பஞ்சாயத்து பேசினர்
இதுகுறித்து பிரேம் கோவிந்தராஜ் நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் பிரேம் கூறியதாவது:- நவீனா என்னால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது... நான் திருநங்கை என்று அவதூறு தகவலை பரப்பினார். மேலும், தனது உறவினர்களை வீட்டிற்கு வரவைத்து என்னை கடுமையாக தாக்கினார். இதற்கிடையே, கடந்த 5 ஆம் தேதி நவீனாவின் வீட்டினர் என்னிடம் வந்து பஞ்சாயத்து பேசினர்.
இதில், என்னிடம் உள்ள ரூ.2 கோடி சொத்தை நவீனாவுக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கூறினார். நவீனாவும் என்னை மிரட்டினார். இதற்கு நான் அவகாசம் கேட்டேன். ஆனாலும் நவீனாவின் வீட்டினர் என்னிடம் தகராறு செய்து என்னை தாக்கினர். கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி என்னை வீடு புகுந்து அடித்ததோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே அள்ளி போட்டனர். என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
மன அழுத்தத்தால் உறவில் ஈடுபட முடியவில்லை
எனது தொழில்முறை வாழ்க்கை மற்றும் அழுத்தத்தால் என்னால் உறவில் ஈடுபட முடியவில்லை. இதை மனைவியிடம் கூறினாலும் அவர் என்னை தொடர்ந்து அவமானம் செய்து வருகிறார். எனவே மனைவி நவீனா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications