பாத்ரூமில் குளித்த வீராங்கணை.. படம்பிடித்த 3ம் கண்.. அலறிய சாய் பயிற்சி ஹாஸ்டல்..சிக்கிய ‛ப்ளேயர்’
பெங்களூர்: பெங்களூர் சாய் பயிற்சி மைய ஹாஸ்டலில் 25 வயது நிரம்பிய டேக்குவாண்டோ வீராங்கணை குளிப்பதை சகமாணவியும், வாலிபால் ப்ளேயருமான ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் சாய் எனும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டுகளை பரப்பவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரமான வீரர், வீராங்கணை உருவாக்கும் பணியை இது மேற்கொண்டு வருகிறது.
மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் சாய் பயிற்சி மையம் அமைந்துள்ளது. அதேபால் கர்நாடகா தலைநகர் பெங்களூரிலும் சாய் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கணைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இரவில் குளித்த வீராங்கணை
இவர்களுக்கு என ஹாஸ்டல் வசதி உள்ளது. டிப்ளமோ ஹாஸ்டலில் பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி டிப்ளமோ ஹாஸ்டலில் பஞ்சாப்பை சேர்ந்த 25 வயது நிரம்பிய டேக்குவாண்டோ வீராங்கணை குளித்து கொண்டிருந்தார். அப்போது நேரம் இரவு 10 மணியாகும். இந்த வேளையில் யாரோ அவரை செல்போனில் வீடியோ எடுப்பது போல் அவர் உணர்ந்தார்.

சிக்கிய வாலிபால் ப்ளேயர்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வீராங்கணை உடலில் துணியை சுற்றிக்கொண்டு உடனடியாக வெளியே வந்தார். அப்போது ஹாஸ்டலில் தங்கி வாலிபால் விளையாட்டுக்கான பயிற்சி பெற்று வரும் மாணவி பாத்ரூமின் வெளிப்புறத்தில் நின்றார். அவர் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து டேக்குவாண்டோ வீராங்கணை அவர் தான் தன்னை வீடியோ எடுத்ததாக நினைத்தார். இதனால் அவரை திட்டினார். மேலும் செல்போனை பிடுங்கி ஆய்வு செய்தார். அப்போது அவரது செல்போனில் எந்த படமும், ஆபாச வீடியோவும் இல்லை.

செல்போன் உடைப்பு
இருப்பினும் சந்தேகம் அடைந்த டேக்குவாண்டோ வீராங்கணை செல்போனில் உள்ள ‛ரீசைகிள் பின்' போல்டருக்கு சென்றார். அப்போது அதிர்ச்சியடைந்த வாலிபால் வீராங்கணை தனது செல்போனை அவரிடம் இருந்து பறித்து தரையில் வீசி உடைத்தார். அதன்பிறகு உடைந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து அவர் வேகமாக சென்றார். இதனால் டேக்குவாண்டோ வீராங்கணைக்கு சந்தேகம் வலுத்தது. தன்னை ஆபாசமாக அவர் வீடியோ எடுத்து இருக்கலாம் என எண்ணினார்.

சஸ்பெண்ட் உத்தரவு
இதையடுத்து சம்பவம் குறித்து மார்ச் 29 ல் பாதிக்கப்பட்ட டேக்குவாண்டோ வீராங்கணை புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் சம்பவளம் பற்றி விசாரணை நடத்த சாய் பயிற்சி மையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் விசாரணையை துவங்கி உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் டேக்குவாண்டோ வீராங்கனைணயை வீடியோ எடுத்த வாலிபால் வீராங்கணையை சஸ்பெண்ட் செய்து சாய் பயிற்சி மையம் உத்தரவிட்டது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications