பெங்களூர் சாலையில் முகம் சுளிக்க வைத்த ஜோடி! தமிழக பதிவெண் பைக்கில் அல்லோகலம்! ரோடுன்னு கூட பார்க்கல
பெங்களூர்: பெங்களூர் சர்ஜாபூர் சாலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண்ணை அமரவைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் உல்லாச பயணம் மேற்கொண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ குறித்த விவரங்களை பார்க்கலாம்.
2 கே கிட்ஸ்கள் பலரும் சாலைகளில் விதிகளை மீறி ரேஸ் செல்வது காதலியுடன் உல்லாசபயணம் செல்வது என முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. போலீசார் கண்டித்தாலும் சரி.. எங்களை திருத்த முடியாது என ஒரு சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் சாலைகளில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகிறது. இப்படியான ஒரு சம்பவம் தான் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

நாட்டிலேயே அதிகம் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். பெங்களூரில் உள்ள பிரதான சாலைகளில் டிராபிக் நெரிசல் என்பது விடுமுறை நாட்களில் கூட அதிகமாக இருக்கும். சில கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்வதற்கு கூட பல சிக்னல்களில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்படி கடுமையான போக்குவரத்து நெரிசல் பெங்களூர் சாலையில் கூட சில வாகன ஓட்டிகள் செய்யும் அட்டுழியம் என்பது சொல்லி மாளாது.
காரை ஓட்டிகொண்டே லேப்டாப்பில் வேலை பார்ப்பது, ரேஸ் களத்தில் செய்ய வேண்டிய சாகசங்களை சாலையில் செய்வது, சில வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். சில நேரங்களில் காதல் ஜோடிகள் பொது இடம் பைக்கில் செல்கிறோம் என்பதை பற்றி கவலைப்படாமல், யார் என்ன நினைத்தால் எங்களுக்கு என்ன? என பெட்ரூமை போல பைக்கை பயன்படுத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுகிறது.

அந்தவகையில் தான் பெங்களூர் சர்ஜாபூர் சாலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட பைக்கில் பெட்ரோல் டேங்கில் இளம்பெண்ணை உட்கார வைத்துக்கொண்டு கட்டிப்பிடித்தபடி இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்டிச்சென்றார். தங்களுக்கு மட்டும் இன்றி சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு கூட ஆபத்தாக இருக்கும் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த ஜோடி உல்லாச பயணம் மேற்கொண்டது சக வாகன ஓட்டிகளுக்கு முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததோடு, ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வாகன பதிவெண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். சாலையில் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இந்த ஜோடியை கண்டுபிடித்து உரிய சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். பெங்களூர் சாலைகளில் சாலை விதிமீறல்கள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications