பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : கர்நாடகாவின் புதிய முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள பசவராஜ் பொம்மை, தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் 2009ம் ஆண்டு பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நாட்களின் போது எடுக்கப்பட்டதாகும்.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    1991ம் ஆண்டு பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவருக்கு சிலையை திறக்க கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் நிறுவப்படாமல் சாக்கு பையை போட்டு திருவள்ளுவர் சிலை மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த சிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக எடியூரப்பா முதல்வரான அந்த காலகட்டத்தில் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    எடியூரப்பா அழைத்தார்

    எடியூரப்பா அழைத்தார்

    இதற்கு கன்னட அமைப்புகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், எதைப்பற்றியும் எடியூரப்பா கவலைப்படாமல் சிலை திறக்க வருமாறு அப்போதைய தமிழக முதல்வர் கருணநிதியை நேரில் சென்று அழைத்தார். இதன் தொடர்ச்சியாக அழைப்பை ஏற்று கர்நாடகா சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    கருணாநிதி நெகிழ்ச்சி

    கருணாநிதி நெகிழ்ச்சி

    அப்போது 18 வது வருட சபதம் நிறைவேறியதாக (திருவள்ளூர் சிலை திறக்காமல் பெங்களூருவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று சூளுரைத்திருந்தார் கருணாநிதி) கருணாநிதி கூறியதுடன் எடியூரப்பாவை தனது தம்பி என்றழைத்தார். பதிலுக்கு கருணாநிதி, என்னுடைய அண்ணன் என்று எடியூரப்பாவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    தலைவர்கள் வரவேற்றனர்

    தலைவர்கள் வரவேற்றனர்

    2008ல் தான் முதல்முதலாக பாஜக தனியாக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்முறையாக மாநிலத்தில் நீர்பாசனத்துறை அமைச்சர் பொறுப்பை பசவராஜ் பொமை ஏற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி , திருவள்ளூருவர் சிலையை பெங்களூருவில் திறந்து வைத்த நிகழ்வின் போது பல்வேறு தலைவர்கள் அவரை வரவேற்றனர்.

    கருணாநிதியுடன் பசவராஜ் பொம்மை

    கருணாநிதியுடன் பசவராஜ் பொம்மை

    அப்படி வரவேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று தான், கர்நாடகாவின் புதிய முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள பசவராஜ் பொம்மை, தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+