கோவா: 4 வயது குழந்தை கொலை-பெங்களூர் பெண் சிஇஓ கைது-உலகின் AI பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்!
பெங்களூர்: கோவாவில் ஹோட்டல் அறையில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவையும் கோவாவையும் ஒரு சேர அதிர வைத்துள்ளது 4 வயது ஆண் குழந்தையின் படுகொலை. The Mindful AI Lab என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசானா சேத். செயற்கை நுண்ணறிவு- Artificial intelligence துறை சார்ந்த நிறுவனம் இது. இந்நிறுவனம் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்னர் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணிபுரிந்தார் சுசானா சேத்.

கோவாவில் 4 வயது மகனுடன் சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். சுசானா சேத். ஆனால் அந்த அறையை காலி செய்யும் போது குழந்தை இல்லாமல் வெளியேறி இருக்கிறார் சுசானா சேத். இதனால் கோவா அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் சுசானா சேத் மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்த விசாரணையில் சுசானா சேத் ஹோட்டலை விட்டு கிளம்பிய போது தனியாகவே பயணித்தார் என கால் டாக்சி ஓட்டுநரும் போலீசாரிடம் தெரிவித்தார்.
பின்னர் கர்நாடகா போலீசாருக்கு கோவா போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சித்ரதுர்காவில் நேற்று சுசானா சேத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டார் சுசானா சேத். இதனையடுத்து சுசானா சேத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
#WATCH | Panaji: Goa Police takes the woman accused of killing her four-year-old son into custody and presents her before Mapusa court. https://t.co/JX2GFdT0XN pic.twitter.com/9kWksyykAf
— ANI (@ANI) January 9, 2024
சுசானா சேத்துக்கு 2010-ல் திருமணம் நடைபெற்றது. 2019-ல்தான் குழந்தை பிறந்தது. சுசானா சேத், 2020-ல் கணவரை விவகாரத்து செய்தார். அப்போது குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு அனுமதி தந்தது நீதிமன்றம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா சேத் விரும்பவில்லையாம். இதனால் குழந்தையுடன் கோவா சென்ற சுசானா சேத், ஹோட்டல் அறையிலேயே குழந்தையை கொலை செய்து பேக் ஒன்றில் உடலை அடைத்து கர்நாடகாவுக்கு எடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பிளாஸ்மா இயற்பியலில் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றவர் சுசானா சேத். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர் சுசானா சேத். கல்லூரி காலங்களில் பல்வேறு வினாடி வினா போட்டிகளில் ஆக்டிவ்வாக பங்கேற்றிருக்கிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசானா சேத் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications