காஷ்மீராக மாறிய பெங்களூர்.. திடீர் ஆலங்கட்டி மழையால் மொத்தமாக மாறிய நகரம்! இதோ வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் கடும் வெயிலுக்கு நடுவே இன்று மாலையில் திடீரென்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பெங்களூர் நகர் ஆலங்கட்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப்பிரதேசம் போல் மாறிப்போனது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கோடை வெயிலுக்கு நடுவே பெங்களூர் நகரில் திடீரென்று பெய்த இந்த ஆலங்கட்டி மழைக்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் நகரில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக மதிய வேளையில் நகரில் நடமாட முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் மின்விசிறி, ஏசி இன்றி இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதற்கு நகரின் பல்வேறு இடங்களில் 36 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வெப்பநிலை பதிவானது தான் காரணமாகும். இந்நிலையில் தான் இன்று மாலையில் பெங்களூர் நகரில் பல இடங்களில் மழை பெய்தது. சுட்டெடுத்து வந்த வெயிலுக்கு நடுவே பெய்த இந்த கோடை மழை நகரை குளிர்வித்தது.
ஆலங்கட்டி மழை
சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் நகரின் பலஇடங்களில் கனமழை பெய்தது. இந்த வேளையில் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. வானில் இருந்து ஆலங்கட்டிகள் விழுந்தன. இந்த ஆலங்கட்டிகள் நகரில் உள்ள சாலைகளிலும், கட்டங்களின் மேற்கூரைகளில் விழுந்து படர்ந்து கிடந்தன. இதனால் திரும்பும் திசையெங்கும் காஷ்மீர் போல் வெள்ளை நிறத்தில் ஆலங்கட்டிகளால் பெங்களூர் நகர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
Catholic Club in Museum Road this Evening.
— Namma Karnataka Weather (@namma_vjy) April 29, 2026
Blue 🔵 Summer 🌞 Days giving way to White Hail drops in Bengaluru.#BengaluruRains pic.twitter.com/KoSHme0JOo
ஆலங்கட்டி மழைக்கு என்ன காரணம்?
பெங்களூரில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததற்கான காரணத்தை பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி என் புவியரசன் விளக்கி உள்ளார். இதுபற்றி அவர், ''பெங்களூர் நகரில் அதிகரித்த வெப்பநிலையின் காரணமாக வெப்பசலனம் ஏற்பட்டது. இந்த வெப்பசலனத்தின் செயல்பாட்டால் தான் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி கீழ்மட்டக் காற்றின் ஓட்டத்தில் ஏற்பட்ட இடையூறு, தொடர்ச்சியின்மை காரணமாக ஈரப்பதம் ஒரே இடத்தில் குவிந்து இருப்பதும் ஆலங்கட்டி மழைக்கு முக்கிய காரணமாகும்'' என்று கூறியுள்ளார்.
Wow! Hail the storm!! Bengaluru. pic.twitter.com/6kKq14RyPy
— DP SATISH (@dp_satish) April 29, 2026
மேலும் இன்றைய தினம் கர்நாடகாவில் மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. பெங்களூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஆலங்கட்டி மழை மேகங்கள் பெங்களூர் நோக்கி நகர்ந்துள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
மளமளவென குறைந்த வெப்பநிலை
இந்த ஆலங்கட்டி மழையின் காரணமாக இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி பெங்களூர் நகரில் 80 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக எச்ஏஎல் ஏர்போர்ட்டில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
Bengaluru you never fail to surprise
— Karnataka Portfolio (@karnatakaportf) April 29, 2026
Today hailstorm at Bengaluru kanteerava Stadium 🌧️☔ #bengaluru #bangalore #bengalururains #bangalorerains pic.twitter.com/jTBeIpAuo2
இந்த மழையின் கரணமாக பெங்களூர் நகரின் வெப்பநிலை கிடுகிடுவென குறைந்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. வழக்கமாக குறைந்தபட்ச வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில் தற்போது 4.5 டிகிரி செல்சியஸ் வரை சரிந்துள்ளது.
மே 2 வரை மழை அலர்ட்
முன்னதாக பெங்களூரில் இன்று முதல் வரும் மே 2ம் தேதி வரை 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்காக 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியிருந்தது. அதன்படி இன்று பெங்களூர் நகரை மழை புரட்டிப்போட்டி உள்ளது.
மேலும் நாளை (ஏப்ரல் 30) பெங்களூர் உள்பட கர்நாடகாவின் உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மே 1ம் தேதி பெங்களூரில் மதியம் அல்லது மாலை வேளயைில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications