உரிமைகளுக்காக வீதியில் இறங்கிய பெங்களூர் ஐடி ஊழியர்கள்! சங்கம்னா சும்மாவா
பெங்களூர்: எந்த அளவுக்கு வேலை செய்கிறோமோ.. அதே அளவுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதைதான் Work-Life Balance என்கிறார்கள். இதற்காக பெங்களூரில் ஐடி ஊழியர்கள் வீதியில் இறங்கி முழக்கம் எழுப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
சமீப காலமாக ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தொழிலாளர்களின் இந்த பேரணி இயக்கம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (KITU) சார்பில் பேரணி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் Work-Life Balance கேட்டு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஐடி துறையிலும் தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 12-14 மணி நேரம் வரை உழைப்பு சுரண்டப்படுவதாகவும், கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு எந்த வித பண பலன்களும் கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பணி சூழல் மிக மோசமானதாக இருப்பதால் மன அழுத்தம், உடல்நல பாதிப்பு உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ளனர், இதற்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 70% ஐடி ஊழியர்கள் கடுமையான மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும், வார விடுப்பு என்ன? வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலை பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட விஷயங்களை இந்த சட்டம் வரையறுக்கிறது.
ஆனால் கர்நாடகாவில் உள்ள வணிக நிறுவனங்கள் இனி 24 மணி நேரமும் வேலை செய்யலாம் என்கிற வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமே? என்று ஐடி ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டத்திருத்தம் எங்களை மேலும் பிழிந்து எடுக்கதான் செய்யும் என்று விமர்சித்திருக்கின்றனர். பேரணியில் பங்கேற்ற ஐடி ஊழியர் ராம்குமார் கூறுகையில்,
"சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் எங்கள் மீதான உழைப்பு சுரண்டல் அதிகரிக்க செய்யும். இதிலிருந்து ஐடி ஊழியர்களால் தப்பிக்கவே முடியாது" என்று கவலை தெரிவித்திருக்கிறார். KITU தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் ரஷ்மி சவுத்ரி கூறுகையில்,
"தொடர் புறக்கணிப்பால் பெண்கள் ஐடி துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நாங்கள் இப்போதைய சூழலில் ஒரு நாளைக்கு 14-16 மணி வரை வேலை செய்கிறோம். கூடுதல் மணி நேரம் வேலை செய்வதற்கு அவர்கள் எந்த பணமும் கொடுப்பதில்லை. ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியெனில் இப்போது நாங்கள் அனுபவித்து வரும் பணி சிக்கலை அவர்கள் இயல்பாக்க முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை பாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம்தான் ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சில துறைகளில் வேலை 60 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது என புள்ளிவிரவங்கள் தெரிவிக்கின்றன.
நீங்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் வாசகர்களே?
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications