அம்பேத்கரை இழிவுபடுத்தி நாடகம் போட்ட ஜெயின் பல்கலைக்கழக மாணவர்கள்.. கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
முதலில், சாதாரணமாக சென்ற அந்த நாடகம் சில நிமிடங்களுக்கு பிறகு ஜாதி வெறியை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் இழிவுப்படுத்தும் வசன
பெங்களூர்: சட்டமேதை அம்பேத்கரையும், தலித் சமூகத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாக பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகம் நாடகம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பார்வையாளர்கள், ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் நாடகக் குழுவினருக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த பல்கலைக்கழகம் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்த நாடகத்தை அரங்கேற்றிய 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயின் பல்கலைக்கழகம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜெயின் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதல் Youth Festival என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி அப்பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பு (Management studies) துறையைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் நகைச்சுவை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கரை இழிவுப்படுத்தி..
முதலில், சாதாரணமாக சென்ற அந்த நாடகம் சில நிமிடங்களுக்கு பிறகு ஜாதி வெறியை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்தும் வசனங்கள் அதில் இடம்பெற்றன. குறிப்பாக, பி.ஆர்.அம்பேத்கர் பெயரை 'பீர்' அம்பேத்கர் என்று உச்சரித்தும் வசனங்கள் பேசப்பட்டன.

கடும் எதிர்ப்பு
இதனால் நாடகம் நடைபெற்று கொண்டிருந்தபோதே, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களும், பொதுமக்களும் அந்த நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பிறகு நாடகம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, பார்வையாளர்களே ஒன்று திரண்டு இந்த நாடகத்துக்கு எதிராகவும், நாடகத்தை அரங்கேற்ற அனுமதியளித்த ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு
இது ஒருபுறம் இருக்க, இந்த நாடகக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், இதுதொடர்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. விஷயம் பூதாகரமாவதை உணர்ந்த ஜெயின் பல்கலைக்கழகம் பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நாடகம் போட்ட 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் இன்று அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications