மாமனாருக்கு மசாஜ்.. நண்பர்களுடன் ஷேரிங்! 2 முறை அபார்ஷன்.. பெண்ணுக்கு இப்படியும் நடக்குமா கொடுமை?
பெங்களூர்: சமீப காலங்களாக இந்தியாவில் பெண்கள் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிர்ச்சி தரும் விதமாக பெங்களூருவில் மனைவியை மேலும் பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்திய கணவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது மாமனாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என கணவனாலேயே அப்பெண் வற்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
வீட்டு வன்முறை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியாவில் தான் என கூறும் அளவுக்கு அடுத்தடுத்து ஏதாவது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கோவையில் இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அதைவிட ஒரு கொடூரமான சம்பவம் பெங்களூருவில் அரங்கேறி இருக்கிறது.

பெங்களூருவில் தனது மனைவி தனது நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்திய கணவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்த பெண்ணுக்கு இரண்டு முறை கருக்கலைப்பும் நடைபெற்றிருக்கிறது. 33 வயதான யூனிஸ் பாஷாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவியான இளம் பெண் கர்ப்பமானதாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த யூனிஸ் பாஷா அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு தெரியாமலேயே கருக்கலைப்பு செய்திருக்கிறார். ஒருமுறை அல்ல இரண்டு முறை இதே போல கருக்கலைப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகமாக வரதட்சணை தர வேண்டும் என அந்த பெண்ணை அடித்து கொடுமை செய்திருக்கிறார். கணவன் யூனிஸ் பாஷா மட்டுமல்லாது அவரது தந்தையும் தாயும் சேர்ந்து அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தினமும் மாமனாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் எனவும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் சில நாட்களில் அரசியல் பிரமுகர்கள் நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்த யூனிஸ் பாஷா அவர்களுடன் அந்த பெண் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் தன்னால் முடியவே முடியாது என அந்த இளம் பெண் மறுக்க பலமுறை தலாக் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். தனது தாயின் வீட்டுக்கு சென்ற நிலையில் கடந்த வாரம் யூனிஸ் பாஷா அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். தன்னுடன் வரவேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த பெண் இது தொடர்பாக பெங்களூர் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
புகார் தொடர்பாக பனசங்கரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் யூனிஸ் பாஷாவுக்கு பெங்களூர்வை சேர்ந்த பல ரவுடிகளுடன் தொடர்பு இருந்ததும் பல பெண்களுடன் அவர் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததும் தெரிய வந்தது. நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என மிரட்டியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் யூனிஸ் பாஷா, அவர்கள் தந்தை சிந்த் பாஷா, தாய் பஹின் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
-
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
டிரம்பை போலவே .. விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய பிரிட்டன்.. இந்தியாவுக்கு தான் மிக பெரிய சிக்கல் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications