பெங்களூரில் 50 லட்சம் சம்பாதித்தாலும் போதாது.. ஆரம்பித்த விவாதம்!
பெங்களூர்: இன்றைய உலகில் சம்பளம் இன்று ஒரு எண் மட்டுமல்ல, அது அந்தஸ்து, வாழ்வாதாரம், சில சமயம் 'சர்வைவல் லெவல்' என்றே பார்க்கப்படுகிறது. அதுவும் பெங்களூர் போன்ற நகரத்தின் அதிவேக வாழ்க்கைச் செலவுகள், ஆகாசத்தைக் கொட்டும் வீட்டு வாடகை, உயர்ந்து கொண்டே இருக்கும் இஎம்ஐ தொகைகள், தினசரி உணவுப் பொருட்களின் விலை, இவற்றுடன் சேர்ந்து பார்த்தால், 50 லட்சம் CTC கூட இப்போது பலருக்கு 'போதாத சம்பளம்' போலவே தோன்றுகிறது.
அதே நேரத்தில், ஒரு வைரல் லிங்க்ட்இன் பதிவு இந்த விவாதத்தை மேலும் நெருப்பை மூட்டியுள்ளது. "பெங்களூருவில் வறுமைக் கோடு: ₹50 லட்சம்" என்ற நகைச்சுவையான வரி, பலரிடமும் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டியது.

இந்த பதிவு வெளிவந்தவுடன் கருத்துகள் மழைபோல் பொங்கின:
- "இந்தியாவின் வறுமைக் கோடு ₹35,000 ஆனா... பெங்களூருவில் அது நேராக ₹50 லட்சமா?" என ஒருவர் சாடினார்.
- "நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு வருமானம் ₹2-4 லட்சம். ஆனால் பெங்களூருவில் சில டெக் துறையில் 40-60 LPA கூட சாதாரணம் போல!" என்று மற்றொருவர் குறிப்பிட்டார்.
- "இந்த விவாதம் 5% உயர் சம்பளதாரர்கள் பற்றிதான்... மீதமுள்ள 95% பேர் இன்னும் ₹10-20 LPAக்குள் தான்" என ஒரு பயனர் சுட்டிக் காட்டினார்.
- "LinkedIn-லில் எல்லாரும் சீனியர்கள்... Twitter-ல எல்லாரும் கோடீஸ்வரர்கள்... நிஜ வாழ்க்கையில் எல்லாரும் EMI-யில் மூழ்கியவர்கள்!" என்று ஒருவர் கலக்கல் கமெண்ட் போட்டார்.
பெண் டெக் ஊழியர்களின் பார்வையும் கவனிக்கத்தக்கது:
- "₹40 லட்சம் சம்பளம் இருந்தாலும், ₹4 லட்சம் இருந்தாலும்... பெங்களூர் போராட்டம் ஒன்றுதான்: வாடகை, ட்ராஃபிக், நேர விரயம்" என்று ஒரு பெண் பதிவு செய்தார்.
- "₹50 LPA சம்பாதித்தாலும், ஒரு சாதாரண 1BHKக்கு ₹40,000 வாடகை கொடுக்க வேண்டியதுதான் பெங்களூருவின் உண்மை," என்று இன்னொருவர் போகிற போக்கில் உண்மையை சொல்லிவிட்டார்.
பெங்களூருவின் சம்பள கலாச்சாரம் இன்று 'சீனியார்' பட்டத்துக்கும், 'CTC'க்கும் அப்பாற்பட்டு ஒரு புதிய உரையாடலை உருவாக்கியுள்ளது-நகர வாழ்க்கை மற்றும் நிஜ சம்பளம் எவ்வளவு இணைந்திருக்கிறது? அல்லது இணைந்திருக்கவே முடியாதா?
நகரம் வளர்கிறது... சம்பள எதிர்பார்ப்புகள் உயர்கிறது... ஆனால் மக்களின் தினசரி வாழ்க்கை?
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications