அடேங்கப்பா.. சமோசா விற்பனையில் தினமும் ரூ.12 லட்சம் வருமானம்.. பெங்களூரை வியக்கவைத்த தம்பதி! ஆஹா
மாதம் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கிய பணியை நிதி சிங் ராஜினாமா செய்து கணவருடன் சேர்ந்து சமோசா வியாபாரம் செய்ய தொடங்கினார்.
பெங்களூர்: இன்றைய சூழலில் பலரும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பினும் கூட சுயதொழில் கைக்கொடுக்குமா? நஷ்டமடைந்தால் என்ன செய்வது? என்ற கேள்விகள் எழுவதால் தொழில் தொடங்கும் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு தொடர்ந்து கார்ப்பரேட் அல்லது சாதாரண நிறுவனங்களில் மாதசம்பளத்துக்கு பலரும் வேலை செய்து வருகின்றனர். இப்படி தொழில் தொடங்க பயப்படும் நபர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தான் பெங்களூரில் ஒரு தம்பதி சாதித்து காட்டியுள்ளனர்.
மாதந்தோறும் தனியார் நிறுவனங்களில் பல லட்சங்களை சம்பளமாக பெற்ற தம்பதி தங்களின் சுயவிருப்பத்தின் பேரிலும், சாதித்து காட்டலாம் என்ற நம்பிக்கையிலும் சமோசா கடை திறந்து தினமும் ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த தகவல் தான் தற்போது பேசும்பொருளாகி உள்ளது. மேலும் தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த தம்பதி முன்னுதாரணமாகி உள்ளனர்.
இந்தியாவில் அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் திண்பண்டங்களில் டாப் 10 இடங்களில் சமோசாவுக்கு இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பலரும் சிற்றுண்டியாக சமோசாவை சாப்பிடுகின்றனர். இன்னும் சிலருக்கே சமோசா இன்றி டீ, காபி என்பது இனிக்காது எனவும் கூறலாம். ஏனென்றால் சமோசா என்பது இன்றைய காலத்தில் பலரின் பேவரைட் ஐயிட்டங்களில் ஒன்றாக உள்ளது.
இதனால் தான் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பெரும்பாலானவர்கள் சமோசா பிரியராக உள்ளனர். இதில் ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. பாமரன் முதல் பலகோடிகளுக்கு அதிபதியானவர்கள் வரை அனைவரும் சமோசாவை விரும்பி சாப்பிடுகின்றனர்.

நம்ப முடிகிறதா?
இந்நிலையில் தான் சமோசா விற்பனை செய்யும் தம்பதி ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதை சட்டென படித்தால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் இது முற்றிலும் உண்மையே. இந்த தம்பதி யார்? இவர்கள் எப்படி சமோசா விற்பனையில் ஈடுபட்டனர்? இவர்களின் வியாபாரம் யுக்தி என்ன? என்ன என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

யார் இந்த தம்பதி?
ஹரியானாவில் பிடெக் பிரிவில் பயோடெக்னாலஜி படிப்பை முடித்தவர் ஷிகர் வீர் சிங். இவர் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் லைப் சயின்சஸில் எம்டெக் படிப்பை முடித்தார். ஷிகர் வீர் சிங்கின் மனைவி பெயர் நிதி சிங். ஹரியானாவில் படித்தபோது ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மாதம் ரூ.30 லட்சம் சம்பளம்
ஷிகர் வீர் சிங் பயோகான் நிறுவனத்தில் முதன்மை சயின்டிஸ்ட்டாக பணியாற்றினார். இவர் ஷிகர் வீர் சிங்கிற்கும் நல்ல சம்பளம் கிடைத்து வந்தது. நிதி சிங் குர்கிராமில் உள்ள பிரபல மருந்து நிறுவனத்தில் ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியில் அமர்ந்தார். இவர் பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் என பணியில் சேர்ந்த நிதி சிங் முதல் முதலாக ரூ.17 ஆயிரம் சம்பளம் பெற்றார். அதன்பிறகு தனது திறமை, உழைப்பால் சட்டென அடுத்தடுத்து புரோமோஷன்களை பெற்ற அவர் ரூ.30 லட்சம் சம்பளம் பெறும் வகையில் உயர்ந்தார்.

பணிகளை ராஜினாமா செய்த தம்பதி
இவர்கள் 2 பேரும் வசதியான பின்புலம் கொண்டவர்கள். நிதி சிங்கின் தந்தை வழக்கறிஞர் ஆவார். மாறாக ஷிகர் வீர் சிங்கின் தந்தை சண்டிகர் மற்றும் அம்பாலாவில் நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் ஷிகர் வீர் சிங் - நிதி சிங் தம்பதி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தனர். அதில் உறுதியாக இருந்த இருவரும் கைநிறைய வாங்கிய சம்பள பணியில் இருந்து தங்களை விடுவித்து கொண்டனர். அதாவது கடந்த 2015ல் ஷிகர் வீர் சிங்கும், நிதி சிங்கும் தங்களின் பணிகளை ராஜினாமா செய்தார்.

கனவு இல்லத்தை விற்று..
இதையடுத்து 2016ல் அவர்கள் பெங்களூருக்கு சென்று சமோசா சிங் எனும் பெயரில் எலக்ட்ரானிக் சிட்டியில் கடையை(Outlet) திறந்தனர். இந்த கடையை அவர்கள் இருவரும் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து வாங்கினர். மேலும் கடையில் சமையலறையுடன் கூடிய வசதி தேவைப்பட்டது. இதையடுத்து அவர்கள் புதிதாக வாங்கி எலகங்காவில் ஒருநாள் மட்டுமே வசித்த கனவு இல்லத்தை ரூ.80 லட்சத்துக்கு விற்றனர். வீடு முக்கியமா? தொழில் முக்கியமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தொழில் தான் முக்கியம் என அவர்கள் நினைத்து வீட்டை விற்றனர். இதையடுத்து அந்த பணத்தை வைத்து சமோசா தயாரிப்புக்கான சமையலறையுடன் கூடிய உற்பத்தி கூடத்தை உருவாக்கினார்கள். அங்கு சமோசா தயார் செய்து கடைகளில் விற்பனை செய்தனர்.

தினமும் ரூ.12 லட்சம் வருமானம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சுவையில் அவர்கள் தயாரித்த சமோசா இருந்தது. இந்த சுவை அவர்களின் வியாபாரத்தை அதிகரிக்க செய்தது. நாள்தோறும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் பல்வேறு வெரைட்டிகளாக சமோசாக்களை அவர்கள் தயாரித்தனர். இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இது அவர்களின் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. இங்கு பட்டர் சிக்கன், கடாய் பன்னீர் சமோசாக்கள் மிகவும் பிரபலமாகும். தற்போது ஒவ்வொரு மாதமும் அவர்கள் 30 ஆயிரம் சமோசாக்களை விற்பனை செய்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் ரூ.45 கோடி வருமானம் ஈட்டுகின்றனர். அதன்படி பார்த்தால் அவர்களின் ஒருநாள் வருமானம் என்பது ரூ.12 லட்சமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐடியா வந்தது எப்படி?
ஷிகர் வீர் சிங்கிற்கு சிறுவயதிலேய பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. கல்லூரி படித்த சமயத்தில் எஸ்பிஐ வங்கிகளின் அருகே சமோசா விற்பனை செய்ய அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் படிப்பில் கவனம் செலுத்த கூறினர். இதனால் அவர் தனது பிசினஸ் முடிவை கைவிட்டு படித்து பயோகானில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் சிறுவன் ஒருவன் சமோசாவுக்கு அழுவதை அவர் பார்த்தார். இந்தியாவில் சமோசாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்து தான் அவர் தனது மனைவி நிதி சிங்குடன் சேர்ந்து சமோசா தொழில் தொடங்கினார். நம்பிக்கையுடன் புதுமையை புகுத்தி தொழில் செய்ததால் அவர்கள் இருவரும் மாதந்தோறும் வாங்கிய சம்பளத்தை சில நாட்களிலேயே பெறும் அளவுக்கு முன்னேறி தினமும் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்த வெற்றியின் மூலம் தற்போது ஷிகர் வீர் சிங்- நிதி சிங் தம்பதி தங்களின் சமோசா தொழிலை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications