Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமில் கசங்கிய "டிஷ்யூ பேப்பர்".. நடுரோட்டில் வாட்டர் பாட்டில் கேட்ட சுசனா சேத்.. ஆடிப்போன டிரைவர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அந்த சூட்கேஸை தூக்கவே முடியல.. அதிக எடை கொண்டதாக இருந்தபோதே சந்தேகம் வந்தது என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார், பெங்களூரு கார் டிரைவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் என்ற மேதாவி பெண்ணுக்கு 39 வயதாகிறது. இவர் கடந்த 6-ந்தேதி கோவாவில் பிரபலமான ஓட்டல் ஒன்றில், தன்னுடைய 4 வயது மகனுடன் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.

Bengaluru Suchana Seth incident and suchana seth did not speak a word while traveling in the car, says driver

பிறகு 2வது நாளே, மகனை கொன்றுவிட்டு, சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்து கொண்டு தப்ப முயன்றார்.. ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்துவிட்டார்கள்.

மகன் சடலம்: கணவன் டைவர்ஸ் கேட்டதால், அவர் மீதிருந்த கோபத்தில் மகனை கொன்றதாக தெரிகிறது. இருமல் மருந்து பாட்டில்களை வாங்கி , குழந்தைக்கு ஊற்றி, தலைகாணியால் அமுக்கி சுசனா சேத் கொன்றிருக்கலாம் என்கிறார்கள். இப்போது அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த உண்மையையும் இதுவரை வெளிப்படையாக அவர் சொல்லவில்லை.

அதேசமயம், தன்னுடைய மகனை தான், கொலை செய்யவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறாராம்.. பிறகு, தன்னுடைய சூட்கேஸ் எடை திடீரென அதிகமானதை கவனிக்கவில்லை என்கிறாராம்.. பிறகு, தன்னுடைய மகன் தூக்கத்தில் இருந்து எழுந்தபோது இறந்துவிட்டான் என்கிறாராம்.. இப்படி பலவிதமான வாக்குமூலங்களை தந்துவருகிறார் சுசானா சேத்.

இந்த கொலை சம்பவத்தை பொறுத்தவரை போலீசாரின் சமயோஜிதபுத்தி அசர வைக்கிறது.. அதைவிட, சுசானா சேத்தை கைது செய்ய பெரிதும் உதவிய கால் டாக்சி டிரைவர் ரே ஜானின் பங்கு அளப்பரியது. இவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

டிரைவர் பேட்டி: ரே ஜான் சொல்லும்போது, "சுசானா சேத், கோவா ஹோட்டலில் தங்கியிருந்தபோது என்னை தொடர்பு கொண்டார்.. நானும் கிளம்பி வந்தேன்.. அங்கே வந்துபார்த்தால் சுசனா சேத், ஒரு பெரிய சூட்கேஸ்ஸை வைத்திருந்தார். அந்த சூட்கேஸ் மிகவும் கனமாக இருந்தது.. என்னால் தூக்க முடியவில்லை.

அந்த கனமான சூட்கேஸில் உள்ள பொருட்களை, வேறு பெட்டிக்கு மாற்றினால் எடை ஓரளவு குறையும் என்று சுசானா சேத்திடம் சொன்னேன்.. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.. பிறகு கோவாவில் இருந்து கிளம்பினோம்.. கிட்டத்தட்ட 10 மணிநேர பயணம் மேற்கொண்டோம்.. ஆனால், வழியில் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்துகொண்டிருந்தார். நடுவில், ஒரேஒருமுறை மட்டும் தண்ணீர் பாட்டில் வேண்டும் என்று கேட்டார். மிகவும் டென்ஷனாக இருந்தார்.

நெரிசல் சாலை: கர்நாடகா-கோவா எல்லையில் உள்ள சோர்லா காட் பிரிவில், திடீரென டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. வண்டிகள் வரிசைகட்டி நின்று, மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.. இதனால், நான் டிராபிக் போலீசாரிடம் சென்று, டிராபிக் எப்போது கிளியர் ஆகும் என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள், எப்படியும் 4 மணி நேரமாகும் என்றார்கள்..

உடனே நான் நேரத்தை மிகைப்படுத்தி, டிராபிக் கிளியராக 6 மணி நேரமாமாம், அதனால், உங்களை ஏர்போர்ட்டில் கொண்டுபோய் விடட்டுமா? என்று கேட்டேன்.. அதற்கு சுசானா சேத் மறுத்துவிட்டார்.. சாலை வழியாக செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்.. அதற்கு பிறகுதான் எனக்கு போலீசாரிடமிருந்து போன் வந்தது.. சுசானா சேத் மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி என்னை எச்சரித்தனர் என்றார் டாக்ஸி டிரைவர் ரே ஜான்.

டிராபிக் ஜாம்: இந்த டிராபிக் ஜாம் மட்டும் நடக்கவில்லையானால், போலீசாரால் இவ்வளவு சீக்கிரம் சுசனா சேத்தை பிடித்திருக்க முடியாது என்கிறார்கள்.. பெங்களூருக்கே சென்றிருந்தாலும்கூட, குழந்தையின் உடலை பெறுவது கடினமாக இருந்திருக்கும் என்கிறார்கள் கோவா போலீசார்.

இதனிடையே, ஓட்டல் ரூமில் சுசனா சேத் எழுதி கடிதம் கிடைத்திருக்கிறது.. ஆனால், அது கடிதம் போலவே இல்லையாம்.. ஏதோ டிஷ்யு பேப்பரில் 5 வரிகள் எழுதியிருக்கிறார்.. பிறகு அந்த பேப்பரை கசக்கி போடவும் முயன்றுள்ளார். அதை வாக்குமூலமாக எழுதி வைக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லை.

சோதனை: தடயவியல் சோதனையின்போது, ரூமில் கசக்கி எறியப்பட்டிருந்த அந்த பேப்பர் கிடைத்துள்ளது.. சுசனாவின் கையெழுத்து மாதிரியுடன் சேர்த்து, அவர் எழுதிய இந்த டிஷ்யூ பேப்பரை சோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

"என்னுடைய மகன், கணவரை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று எழுதியதாக தெரிகிறது. ஆனால், அந்த பேப்பரில் வேறு சில வரிகளும் இருந்ததாக தெரிகிறது.. அதாவது, மகனை கொலைசெய்யும்போது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை, அவர் எழுதிய வரிகள் பிரதிபலிப்பதாக இருந்தது என்கிறார்கள் போலீஸார்.. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை முழுமையாகச் சொல்வது சரியாக இருக்காது என்கிறார்கள் போலீஸார்.

அப்பா ஜாடை: அதுமட்டுமல்ல, தன்னுடைய தோழிகள், நண்பர்களிடம் பேசும்போதெல்லாம், தன்னுடைய மகன், தன் கணவரை போலவே இருப்பதாக சொல்லி கொண்டே இருப்பாராம்.. அப்பா ஜாடையில் குழந்தை இருந்து வந்ததும், சுசனா சேத்துக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் தந்துள்ளது.. கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்கிறார்கள்..

ஆனால் சுசனா தன்னுடைய மகன்மீது அதிக அன்பு வைத்திருந்ததாக, அவர் வசித்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் சொல்கிறார்கள். அளவுக்கு மீறினால், அன்பு கூட ஆபத்துதான் போல...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+