அதானி கையில் பெங்களூர் சில்க் போர்ட் சுரங்கசாலை திட்டம்? 4,000 கோடிக்கு அதிக மதிப்பீடு!
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 17 கிலோமீட்டர் தொலைவுக்கு ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை சுரங்க சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டது. மொத்தம் 4 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் அதில் அதானி குழுமம் தான் மிக குறைந்த தொகையில் பணியை முடிப்பதாக கூறியுள்ளது. இருப்பினும் அரசு மதிப்பீட்டை ஒப்பிடும்போது அது ரூ.4,569 கோடி அதிகமாகும் என்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஏற்கனவே அதானி நிறுவனத்தை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் அதானி குழுமத்திடம் இந்த திட்டம் வழங்கப்பட்டால் அது விவாவதத்தை எழுப்பலாம் என்பதால் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் பற்றிய முழு விவரம் வருமாறு:

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். டிகே சிவக்குமார் தான் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சகத்தின் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை 17 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. லால்பாக், ரேஸ்கோர்ஸ் ரோடு, மேக்ரி சர்க்கிள் வழியாக ஹெப்பால் வரை செல்ல உள்ளது.
இதையடுத்து கர்நாடகா அரசின் ‛பி ஸ்மைல்' (B-SMILE) சார்பில் திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.17,698 கோடி வரை செலவு வரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ‛பி ஸ்மைல்' என்பது பெங்களூர் உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளுக்கான அரசின் நிறுவனமாகும். இதையடுத்து திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் அதானி குரூப், திலிப் பில்டுகான், விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங், ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. 4 நிறுவனங்களும் டெண்டர் கோரின.
இதில் திலிப் பில்ட்கான் நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் கட்டிய பாலம் சேதமடைந்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதேவேளையில் ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியிலான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அந்த நிறுவனம் டெண்டரில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் போட்டியில் அதானி குரூப் மற்றும் விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இந்த 2 நிறுவனங்களும் திட்டத்துக்கான மதிப்பீட்டை வழங்கி உள்ளன. அதன்படி அதானி நிறுவனம் சார்பில் சுரங்க சாலை திட்டத்தின் முதற்பகுதியில் ஹெப்பால் (எஸ்ட்டீம் மால்) முதல் சேஷாத்திரி ரோடு வரையிலான 8.7 கிலோமீட்டர் வரையிலான பணியை முடிக்க ரூ.10,867 கோடியும், 2வது கட்ட திட்டமான சேஷாத்திரி ரோடு முதல் மடிவாளா (செயின்ட் ஜான் மருத்துவமனை) வரையிலான பணிக்கு ரூ.11,400 என மொத்தம் ரூ.22,267 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங் நிறுவனம் முதற்கட்ட பணிக்கு ரூ.12,432, இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.13,042 என மொத்தம் ரூ.25,474 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்துள்ளது. இந்த 2 நிறுவனங்களின் அரசு மதிப்பீடு செய்த ரூ.17,698 கோடியை விட அதிகமான தொகையை டெண்டரில் காட்டி உள்ளன. இருப்பினும் விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங் நிறுவனத்தை ஒப்பிடும்போது அதானி நிறுவனம் தான் குறைந்த அளவில் டெண்டர் வழங்கி உள்ளது. இதனால் இந்த பணி அதானி குழுமத்தை செல்கிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் தற்போது ராகுல் காந்தி தொடர்ந்து அதானி நிறுவனத்தை விமர்சனம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போதைய டெண்டரில் கூட அரசு மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.4,569 கோடியை டெண்டரில் கூறியுள்ளது. இதனால் இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் தலைமை ஆணையரும், ‛பி - ஸ்மைல்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மகேஸ்வர் ராவிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
அதேவேளையில் துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛இந்த சுரங்க சாலை திட்டம் 2 கட்டமாக நடக்க உள்ளது. அரசு சார்பில் 40 சதவீத பணம் வழங்கப்படும். மீதமுள்ள 60 சதவீத பணம் தனியார் நிறுவனம் தான் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் பணி தொடங்கப்பட உள்ளது. இது BOT திட்டம் என்பதால் இந்த நிதி பகிர்வு அவசியம். தற்போதைய டெண்டர் விவகாரம் பற்றி அமைச்சரவையில் முடிவு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையே தான் இந்த திட்டத்தை கைவிட பாஜக கோரியுள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியின் பாஜக எம்பியான பிசி மோகன், ‛‛பெரிய சுரங்கப்பாதை நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கவில்லை. 60 சதவீத செலவு செய்து அதனை சுங்கக்கட்டணம் வாயிலானக தனியார் நிறுவனம் பெற்று கொள்வது போன்ற டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இது மக்களின் மீதான சுமையை அதிகப்படுத்தும். இதனால் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும்'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications