மாஸ்க்குடன் உற்சாகமாக ஓடிவந்த பெண்! மாஸாக உதவிய ராகுல் காந்தி! பாரத் ஜோடோ யாத்திரை என்னாச்சி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் மாஸ்க் அணிந்தபடி ஓடிவந்த பெண் அவரை பார்த்து உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வேளையில் அந்த பெண்ணின் மாஸ்க் கழன்ற நிலையில் ராகுல் காந்தி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17 ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.

3வது மாநிலத்தில் யாத்திரை

3வது மாநிலத்தில் யாத்திரை

கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய இந்த பாத யாத்திரை கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

ராகுலுக்கு ஆதரவு வழங்கும் மக்கள்

ராகுலுக்கு ஆதரவு வழங்கும் மக்கள்

நேற்று நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன், சோனியா காந்தி பங்கேற்றார். இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வேளையில் ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார். மேலும் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். பெண்கள், சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் என அனைவரும் அவருடன் கைக்கோர்த்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து மகிழ்வதோடு, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பூங்கொத்து கொடுத்து ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுலை பார்த்து ஓடிவந்த பெண்

ராகுலை பார்த்து ஓடிவந்த பெண்

இந்நிலையில் இன்று காலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கே மல்லேனஹள்ளி கிராமத்தில் துவங்கியது. வழக்கம்போல் ராகுல் காந்தியுடன் கட்சி தலைவர்கள் நடைப்பயணத்தை தொடங்கினர். இந்த வேளையில் இளம்பெண் ஒருவர் ராகுல் காந்தியை பார்க்க வேகமாக ஓடிவந்தார். அவர் ராகுல் காந்தியின் அருகே சென்று பேசினார். ‛‛உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி'' என உற்சாகமாக கூறினார்.

மாஸ்க் அணிய உதவிய ராகுல்

மாஸ்க் அணிய உதவிய ராகுல்

அப்போது அந்த பெண் அணிந்திருந்த மாஸ்க் கழன்றது. ராகுல் காந்தியை பார்த்த மகிழ்ச்சியால் மாஸ்க்கை அந்த பெண்ணால் சரியாக அணிய முடியவில்லை. இதனை கவனித்த ராகுல் காந்தி அந்த பெண் அணிந்திருந்த மாஸ்க்கை சரியாக அணிய உதவினார். மாஸ்க்கில் இருந்த ரோப்பை கட்டிவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர்.

தாய்க்கு மகன் செய்த உதவி

தாய்க்கு மகன் செய்த உதவி

முன்னதாக நேற்று ராகுல் காந்தியுடன், சோனியா காந்தி நடைப்பயணம் செய்தார். அப்போது சோனியா காந்தி அணிந்திருந்த ஷு லேஸ் அவிழ்ந்தது. இதையடுத்து ராகுல் காந்தி ஷு லேஸை கட்டிவிட்டார். மேலும் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். இருப்பினும் தொண்டர்களை உற்சாகப்படுத்த உடல்நலனை பொருட்படுத்தாமல் நடைப்பயணத்தில் பங்கேற்றார். தொண்டர்களுடன் அவர் நடந்து சென்றார். இந்த வேளையில் சோனியா காந்தியின் உடல்நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி அவரை காரில் ஏற்றி அனுப்பியதும் காங்கிரஸ் கட்சியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+